அடேங்கப்பா இப்படி கூட கேட்ச் பிடிக்க முடியுமா, பார்ப்பவர்களை ஆச்சரியப்பட வைத்த ஜானி பேர்ஸ்டோவின் ஒற்றைக்கை கேட்ச் – வீடியோ இணைப்பு

0
799

இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் இன்று வெற்றிகரமாக தொடங்கியது. முதல் டெஸ்ட் போட்டியில் தற்பொழுது நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து கொண்டிருக்கிறது. முதல் இன்னிங்சில் அந்த அணி 30 ஓவர் முடிவில் 78 ரன்கள் எடுத்த நிலையில் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

அந்த அணியில் அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் டாம் பிளண்டல் 14 ரன்கள் மட்டும் எடுத்து இருக்கிறார். இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் மேட்டி பாட்ஸ் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய அசத்தியுள்ளனர்.

- Advertisement -

அபாரமாக கேட்ச் பிடித்த ஜானி பேர்ஸ்டோ

ஆட்டத்தின் மூன்றாவது ஓவரின் முதல் பந்தை ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசினார். வில் யங்குக்கு எதிராக அவர் வீசினார். ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசிய பந்து ஸ்விங் ஆக வில் யங் பேட்டில் பட்டு அவுட் சைடு எட்ஜ் ஆனது. ஸ்லீப் வீரராக நின்று கொண்டிருந்த ஜானி பேர்ஸ்டோ ஒற்றைக் கையில் அபாரமாக அந்த பந்தை பிடித்தார். அவ்வாறு அவர் கேட்ச் பிடித்த விதம் ஒரு நொடியில் ஏதோ மாயாஜாலம் நிகழ்ந்தது போல் இருந்தது.

அந்த விக்கெட் விழுந்தவுடன் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியை தன்னுடைய டுவிட்டர் கணக்கில் இது சம்பந்தமாக ஒரு ட்வீட் செய்தார். “என்ன ஒரு தொடக்கம். சிகப்பு பந்து டெஸ்ட் போட்டியின் ஆரம்பத்திலேயே இவ்வாறு ஸ்விங் ஆவது கண்கொள்ளா காட்சி. கிரிக்கெட் விளையாட்டைப் பொறுத்த வரையில் டெஸ்ட் போட்டி எப்போதும் சிறந்தது தான்” என்று ட்வீட் செய்திருந்தார்.

- Advertisement -

அவரைப் பார்த்து நான் விளையாடியிருக்கிறேன்

நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் வில் யங், “நியூசிலாந்து கிரிக்கெட்டை பொருத்தவரையில் பிரெண்டன் மெக்கல்லம் ஒரு முன்னோடி. அவர் நியூசிலாந்து எனக்கு எவ்வளவு தூரம் முன்னோக்கி எடுத்துச் சென்றார் என்று நான் அறிந்திருக்கிறேன். என்னுடைய ஆரம்ப காலத்தில் அவரைப் பார்த்துதான் நான் விளையாடி இருக்கிறேன் என்று சொல்லியுள்ளார்.

மேலும் பேசிய அவர் அவருடன் இணைந்து நான் விளையாடவில்லை தற்போது அவருக்கு எதிராக (இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைமை பயிற்சியாளர் அதை குறிப்பிட்டு அவ்வாறு கூறியிருக்கிறார்) விளையாடிக் கொண்டிருக்கிறேன் என்று புன்னகைத்தபடி கூறியுள்ளார். இறுதியாக கேப்டன் பிரெண்டன் மெக்கல்லமின் வாரிசு தற்போதைய கேப்டன் கேன் வில்லியம்சன் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.