4வது இன்னிங்ஸில் அபார சதம் விளாசி 10000 ரன்களைக் கடந்த ஜோ ரூட் ; கேப்டனான முதல் போட்டியிலேயே வெற்றி பெற்றது குறித்து மனம் திறந்த ஸ்டோக்ஸ்

0
129
Joe Root and Ben Stokes

நியூசிலாந்து அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இங்கிலாந்திற்குச் சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இதற்கு முன் இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து ஜோ ரூட் நீக்கப்பட்டு பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட்டார். டெஸ்ட் அணிக்குப் புதிய பயிற்சியாளராக நியூசிலாந்தின் முன்னாள் கேப்டன் பிரன்டன் மெக்கல்லம் கொண்டுவரப்பட்டார்.

இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கடந்த இரண்டாம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்ய, நியூசிலாந்து அணி 132 ரன்களுக்கு சுருண்டது. அறிமுக வீரர் மேக்யூ போட்ஸ், ஆன்டர்சன் தலா நான்கு விக்கெட்டுகளை விழ்த்தினார்கள். அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியும் 141 ரன்களுக்கு சுருண்டது. டிம்செளதி நான்கு, டிரெண்ட் போல்ட் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

- Advertisement -

நியூசிலாந்திற்கு இரண்டாவது இன்னிங்ஸில் முதல் நான்கு விக்கெட்டுகள் சீக்கிரத்தில் விழ, டேரில் மிட்ச்செல் 108, டாம் புளுன்டால் 98 ரன்கள் அடுத்து. இங்கிலாந்துக்கு இலக்காக 277 ரன்களை வைத்திருந்தனர். அடுத்துக் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கும் துரித கதியில் நான்கு விக்கெட்டுகள் விழ, நோ-பால் அவுட்டிலிருந்து தப்பிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அரைசதமடித்து நேற்று ஆட்டமிழக்க, மற்றொரு முனையில் அரைசதமடித்து ஜோ ரூட்டும், விக்கெட் கீப்பர் பென் போக்சும் களத்தில் இருக்க, நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 216 ரன்களை 5 விக்கெட் இழந்து எடுத்திருந்தது.

கைவசம் இரண்டு நாட்களும், ஐந்து விக்கெட்டுகளும் இருக்க, வெற்றிக்கு 61 ரன்கள் தேவைப்பட, ஸ்விங் கன்டிசன் நிலவ, ஆட்டத்தில் யார் வேண்டுமானாலும் வெல்லலாம் என்ற நிலையே நிலவியது. ஆனால் சிறப்பாக விளையாடிய ஜோ ரூட் சதமடித்து பத்தாயிரம் ரன்களை பூர்த்தி செய்து, அணியையும் வெல்ல வைத்துவிட்டார். அவருக்கு ஒத்துழைப்பு தந்த பென் போக்ஸ் 32 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இது பென் ஸ்டோக்ஸிற்கு முழுநேர கேப்டனாக முதல் வெற்றி ஆகும்.

மேலும் இன்று 218 இன்னிங்ஸில் பத்தாயிரம் ரன்களை எட்டிய ஜோ ரூட் குறைந்த வயதில் பத்தாயிரம் ரன்களை அடித்தவர் என்ற சாதனையைப் படைத்தார்.
ஜோ ரூட் – 31வருடம் 157 நாட்கள்
அலஸ்டர் குக் – 31 வருடம் 157 நாட்கள்
சச்சின் – 31 வருடம் 326 நாட்கள்

- Advertisement -