ஜோ ரூட் இங்கிலாந்து கிரிக்கெட்டில் சரித்திர சம்பவம்.. பாகிஸ்தான் டெஸ்டில் குவியும் சாதனைகள்

0
784
Root

பாகிஸ்தானில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் ஜோ ரூட் இங்கிலாந்து சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மகத்தான சாதனையை படைத்திருக்கிறார்.

தற்போது பென் ஸ்டோக்ஸ் தலைமையில் இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு பாகிஸ்தானுக்கு வந்துள்ளது. காயம் காரணமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. துணை கேப்டன் ஒல்லி போப் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

தார் ரோடு ஆடுகளம்

இந்த முதல் டெஸ்ட் போட்டிக்கு ஆடுகளம் பேட்டிக் செய்வதற்கு மிகவும் சாதகமாக தார் ரோடு போல இருப்பதாக இங்கிலாந்து தரப்பில் விமர்சனம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் அப்துல்லா ஷபிக், ஷான் மசூத் மற்றும் ஆகா சல்மான் என பாகிஸ்தானுக்கு மூன்று பேர் சதம் அடிக்க பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 556 ரன்கள் எடுத்தது.

இதைத் தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் மட்டும் இழந்து 96 ரன்கள் எடுத்திருந்தது. களத்தில் ஜாக் கிரவுலி மற்றும் ஜோ ரூட் இருவரும் இருந்தார்கள். முதல் இன்னிங்ஸ் வித்தியாசம் மிகப்பெரிய அளவில் இருந்ததால் இங்கிலாந்து நின்று விளையாட வேண்டிய அவசியம் இருந்தது.

- Advertisement -

ஜோ ரூட் சரித்திர சம்பவம்

இந்த நிலையில் இன்று தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணிக்கு ஜாக் கிரவுலி 85 பந்துகளில் 78 ரன்கள், பென் டக்கெட் 75 பந்துகளில் 84 ரன்கள் அதிரடியாக எடுத்து ஆட்டம் இழந்தார்கள். தொடர்ந்து விளையாடிய ஜோ ரூட் அரை சதம் அடித்தவுடன், இங்கிலாந்து சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன் அடித்த இங்கிலாந்து வீரர் என்கின்ற சாதனையை அலைஸ்டர் குக்கை தாண்டி படைத்தார்.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த இங்கிலாந்து வீரர்கள் :

ஜோ ரூட்-12,473*
அலஸ்டர் குக் – 12,472
கிரஹாம் கூச் – 8900
அலெக் ஸ்டீவர்ட் – 8463
டேவிட் கோவர் – 8231

இதையும் படிங்க

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள்:

சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) – 15,921
ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா) – 13,378
ஜாக் காலிஸ் (தென் ஆப்பிரிக்கா) – 13,289
ராகுல் டிராவிட் (இந்தியா) – 13,288
ஜோ ரூட் (இங்கிலாந்து) – 12,473*

- Advertisement -