இங்கிலாந்து அணிக்கு நட்சத்திர வீரர் ஜோ ரூட் தன்னை பற்றி ஆஸ்திரேலியா முன்னாள் தலைமை பயிற்சியாளர் டேரன் லெஹ்மன் செய்துள்ள விமர்சனம் குறித்து கோபமாக பதில் அளித்து இருக்கிறார்.
தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு இங்கிலாந்து அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இந்த தொடருக்கு முன்பாக ஜோ ரூட்டிடம் இந்த கேள்வி முன்வைக்கப்பட்ட பொழுது அவர் அதற்கு பதில் அளித்து பேசி இருக்கிறார்.
ஜோ ரூட் வளரும் காலகட்டத்தில் இங்கிலாந்து கிளப் அணியான யார்க்செயரில் அவருக்கு பயிற்சியாளராக டேரன் லெஹ்மன் இருந்திருக்கிறார். மேலும் ஜோ ரூட் இங்கிலாந்து அணிக்காக விளையாடிய நான்கு ஆசஸ் தொடர்களின் போது ஆஸ்திரேலியா அணியின் தலைமை பயிற்சியாளராக டேரன் லெஹ்மன் இருந்திருக்கிறார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆசஸ் தொடர்களில் ஜோ ரூட் 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 35.68 சராசரியில் 9 அரை சதங்களுடன் 892 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரையில் ஜோ ரூட் ஆஸ்திரேலியா மண்ணில் சதம் அடித்தது கிடையாது.
இதுகுறித்து சில நாட்களுக்கு முன்பு பேசி இருந்த டேரன் லெஹ்மன் கூறும்பொழுது ” ஜோ ரூட்டை எல்லா காலத்திலும் சிறந்த பேட்ஸ்மேன் என்று கூறுவதற்கு, ஆஸ்திரேலியாவில் அவர் சதம் அடிக்காமல் இருப்பதுதான் என்னை தடுக்கிறது. அவர் சிறந்த வீரர். ஆனால் என் அளவில் அவர் எல்லா காலத்திலும் சிறந்த வீரர் கிடையாது” என்று கூறியிருந்தார்.
இது குறித்து ஜோ ரூட் பதில் அளிக்கும் போது “”என்னுடைய வேலை அணிக்காக ரன் அடிப்பதும், போட்டிக்காக தேவையான எல்லாவற்றிலும் முயற்சி செய்வதும் ஆகும். அவருடைய வேலை வானொலியில் அவருடைய கருத்துக்களை தெரிவிப்பது ஆகும். நான் என் வேலையை செய்கிறேன். அவர் அவர் வேலையை செய்கிறார்”
இதையும் படிங்க : பும்ராவ தப்பா சொல்ற முட்டாள்தனத்தை நிறுத்துங்க – இந்தியாவை குறைவா எடை போடாதிங்க – ஆஸி கிரேக் சேப்பல் கருத்து
“நான்காலமாக அவரிடம் பேசவில்லை.நான் என் வேலையைச் செய்கிறேன். அவர் அவர் வேலையை செய்கிறார். அவர் விரும்புவதை சொல்வதற்கு அவர் முற்றிலும் தகுதியானவர். அது அவருடைய உரிமை” என்று கூறியிருக்கிறார்.