தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு இஷான் கிஷான் இடைக்கால கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர் கேப்டன் பதவிக்கு எவ்வளவு தகுதியானவர் என்பது குறித்து ஜார்க்கண்ட் மாநில பயிற்சியாளர் சன்னி குப்தா பேசியிருக்கிறார்.
கடந்த சையத் முஸ்தாக் அலி தொடரை ஜார்கண்ட் அணி இஷான் கிஷான் தலைமையில் வென்றது. மேலும் இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரராக இஷான் கிஷான் வந்தார். கேப்டன் மற்றும் பேட்ஸ்மேன் ஆக சிறப்பாக விளையாடி இந்திய டி20 அணியில் இடம்பெற்ற என்பது குறிப்பிடத்தக்கது.
ஹைதராபாத் அணி முடிவு
இந்த ஐபிஎல் தொடரின் தொடக்க சில போட்டிகளில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் காயம் காரணமாக விளையாட முடியாது என சொல்லப்படுகிறது. எனவே அனுபவம் வாய்ந்த டிராவிஸ் ஹெட் கேப்டனாக வரலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் டி20 உலக கோப்பையில் சிறப்பாக விளையாடிய, ஜார்க்கண்ட் அணியை சாம்பியன் ஆக்கிய இஷான் கிஷானை புதிய கேப்டனாக அறிவித்தது. தற்போது இந்த பொறுப்புக்கு அவர் எவ்வளவு தகுதியானவர் என்பது குறித்து ஜார்க்கண்ட் பயிற்சியாளர் சன்னி குப்தா கூறியிருக்கிறார்.
தோனியிடம் கற்றுக் கொண்டார்
இது குறித்து அவர் பேசும் பொழுது “எங்கள் ஜார்க்கண்ட் உள்நாட்டு வீரர்கள் ஒரு முறை ஆட்டோவில் பயணம் செய்ய வேண்டி இருந்தது. இஷான் கிஷான் இடம் தனியாக பெரிய கார் இருந்தபோது கூட அவர் அணி வீரர்களுடன் சேர்ந்து ஆட்டோவில் வந்தார். மேலும் அணியில் ஏதாவது ஒழுக்கமீறல் நடைபெற்றால் ஆயிரம் ரூபாய் அபராதம் மிதிக்கும் முறையை கொண்டு வந்தார். அவர் எல்லோரிடமும் மகிழ்வாக இருப்பார் அதே சமயத்தில் கண்டிப்பாகவும் இருப்பார்”
இதையும் படிங்க : பட்டையை கிளப்பும் சிஎஸ்கே இளம் வீரர்.. பின்னால் இருந்து பாராட்டி தள்ளிய தோனி.. மீண்டும் கிடைத்த மாற்று
“அவரை எல்லோரும் சிரித்துக் கொண்டிருக்கும் பையனாகவே பார்க்கிறார்கள். ஆனால் அவர் ஒரு கேப்டனாக மணி கணக்கில் உட்கார்ந்து எதிரணி வீரர்கள் குறித்து ஆராய்ச்சி செய்வார். மேலும் தோல்வி அடைந்தால் கூட நம்முடைய நோக்கம் சரியாக இருந்தால் தோல்வியை ஏற்றுக்கொள்ளலாம் என்று கூறுவார். அவர் மகேந்திர சிங் தோனியிடம் இருந்து கேப்டன்சி பொறுப்பை கற்றுக் கொண்டுள்ளார். எனவே அவர் இந்த பொறுப்புக்கு தகுதியானவர்” என்று கூறி இருக்கிறார்.






