இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷா பல விஷயங்கள் குறித்து வெளிப்படையாக தற்போதைய ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். இதில் மிகக் குறிப்பாக ஐசிசி வைத்த ஒரு கோரிக்கையை அவர் உடனடியாக மறுத்தது பற்றி கூறியிருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் ஐசிசி இரண்டும் இணைந்து செயல்படுவதாகவும், மேலும் இதன் தாக்கம் உலக கிரிக்கெட்டில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்றும் பலரும் வெளியில் இருந்து பேசி வருகிறார்கள். இந்திய கிரிக்கெட் வாரியம்தான் ஐசிசி என்பதே என்றும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
இப்படியான நிலையில் தான் இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா ஐசிசி கேட்டுக்கொண்டோம் தான் ஒரு விஷயத்தை மிக உறுதியாக மறுத்து விட்டதாகவும், இந்திய கிரிக்கெட் வாரியம் தொடர்ந்து சில வேலைகளை செய்யும் என்று காட்ட தான் நினைக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார்.
தற்போது பங்களாதேஷ் நாட்டில் உள்ள சூழ்நிலை மிகவும் மோசமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் ஐசிசி அங்கு இந்த ஆண்டு பெண்கள் டி20 உலக கோப்பை தொடரை நடத்துவதற்கு திட்டமிட்டு இருந்தது. இப்படியான நிலையில் இந்தியாவிடம் பெண்கள் டி20 உலக கோப்பையை நடத்த ஐசிசி கேட்டிருக்கிறது. அதற்கு ஜெய் ஷா உடனடியாக மறுப்பு தெரிவித்து இருக்கிறார்.
இதுகுறித்து ஜெய் ஷா கூறும் பொழுது “பெண்கள் டி20 உலக கோப்பையை நடத்த முடியுமா? என்று எங்களிடம் ஐசிசி கேட்டது. நான் உடனடியாக திட்டவட்டமாக மறுத்து விட்டேன். காரணம் நாங்கள் தொடர்ந்து அப்பொழுது மழைக்காலத்தில் இருப்போம். மேலும் நாங்கள் அடுத்த ஆண்டு பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை நடத்த இருக்கிறோம். இது மட்டும் இல்லாமல் இந்தியா தொடர்ந்து உலக கோப்பைகளை நடத்தும் என்கின்ற ஒரு எண்ணத்தை நான் உருவாக்க விரும்பவில்லை” என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : வரலாற்று டி20 தொடர்.. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஸ்காட்லாந்து அணி அறிவிப்பு.. கோச் உற்சாகம்
ஐசிசி அமைப்புக்காக இந்திய கிரிக்கெட் வாரியம் எல்லாம் செய்யும் என்கின்ற கருத்தை ஜெய் ஷா உடைத்திருக்கிறார். மேலும் உலக கிரிக்கெட்டில் இந்திய கிரிக்கெட் வாரியம் பெரிய ஆதிக்கத்தை செலுத்த முயலவில்லை என்பதையும் அவர் மறைமுகமாக கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.