இந்திய கிரிக்கெட்

இனி ஸ்ரேயாஸ் டீம் இந்த தப்பை செய்யக்கூடாது.. உங்க பவுலர்களை நம்பி இதை பண்ணுங்க – புஜாரா அறிவுரை

​வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான நான்காவது டி20ஐ போட்டியில் விளையாட உள்ள இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் குறித்து இந்திய முன்னாள் வீரர் தனது முக்கிய அறிவுரையை வழங்கி உள்ளார். இந்த தொடரின் மூன்றாவது டி20ஐ போட்டியில் இந்திய அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-1 என முன்னிலையில் உள்ளது. இருப்பினும் இந்த போட்டியில் ஒரு கட்டத்தில் 115-1 என வலுவாக இருந்த இந்திய அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 169-6 என தடுமாறியது.

- Advertisement -

​ஹைதராபாத் மைதானத்தில் நான்காவது டி20ஐ போட்டி நடைபெற உள்ள நிலையில், இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்டர்கள் பிட்ச் கண்டிஷன்ஸ் குறித்து புரிந்து கொண்டு பொறுப்புடன் விளையாட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இந்திய அணியின் பேட்டர்கள் அதிரடியாக விளையாட வேண்டும் என்ற எண்ணத்தில் மட்டுமே கவனம் செலுத்தாமல், போட்டியில் பார்ட்னர்ஷிப் அமைப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

​இதுகுறித்து புஜாரா பேசும்போது “அவர்கள் சிறிய பார்ட்னர்ஷிப் அமைப்பதில் கவனம் செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும். டி20ஐ போட்டியில் ஒரு விக்கெட் விழும்போது 5, 10 மற்றும் 15 ரன்கள் கொண்ட பார்ட்னர்ஷிப் அமைப்பதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே அடுத்த விக்கெட் விழுவதை தாமதப்படுத்த முடியும். மைதானத்தின் கண்டிஷன்ஸ் மற்றும் பிட்ச் ஆகியவற்றிற்கு மதிப்பளித்து அதன் பிறகு டார்கெட் குறித்து யோசிக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

​தொடர்ந்து பேசிய அவர் “ஒரு நல்ல ஸ்டார்ட் கிடைக்கும் போது மிடில் ஆர்டர் பேட்டர்களுக்கு எது சரியான டோட்டல் என்பதில் குழப்பம் ஏற்படும். அப்போது ஒரு பேட்டராக உங்கள் மீது அதிக பிரஷர் போட்டுக்கொள்ளக்கூடாது. 260-270 ரன்கள் அடிக்க வேண்டும் என்று யோசித்து உங்கள் விக்கெட்டுகளை இழந்து விடக்கூடாது. 15 ஓவர்கள் வரை நல்ல கிரிக்கெட் விளையாடி கையில் விக்கெட்டுகள் இருந்தால் கடைசி 5 ஓவர்களில் அதிக ரன்கள் அடிக்க முயற்சிக்க வேண்டும்” என்று தெரிவித்து உள்ளார்.

- Advertisement -

​மேலும் பேசிய அவர் “இந்தூர் போட்டிக்கு பிறகு பேட்டர்கள் தங்கள் தவறுகளில் இருந்து கற்றுக்கொண்டு இருப்பார்கள். மேலும் நமது பவுலிங் யூனிட் 220 ரன்களை டிஃபெண்ட் செய்யும் என்ற பெரிய நம்பிக்கையையும் அவர்கள் பெற்று இருப்பார்கள். அதனால் அவர்கள் ஒவ்வொரு முறையும் 250-260 ரன்கள் அடிக்க வேண்டும் என்று ரொம்ப ஹார்ட் ஆக விளையாட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் ஹைதராபாத் மைதானத்தில் டாஸ் வெல்லும் அணி முதலில் பௌலிங் செய்யவே விரும்பும்” என்று கூறி முடித்து இருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts