பும்ரா எங்க உஸ்மான் தாரிக் மாதிரி.. அவர்கிட்டயும் இது இருக்கு – பாக் முன்னாள் வீரர் சர்ச்சை பேச்சு

0
10
Javed

இந்திய நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ராவை பாகிஸ்தான் சுழல் பந்துவீச்சாளர் உஸ்மான் தாரிக் உடன் ஒப்பீடு செய்து அகிப் ஜாவேத் பேசியிருப்பது சர்ச்சையாக மாறியிருக்கிறது.

தற்காலத்தில் மட்டுமல்லாமல் எல்லா காலகட்டத்திலும் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் பும்ரா என பல வெளிநாட்டு முன்னாள் வீரர்கள் கூற ஆரம்பித்திருக்கிறார்கள். நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையில் பும்ரா செலுத்திய தாக்கத்தால் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.

- Advertisement -

சர்ச்சையானது ஏன்?

அகிப் ஜாவேத் பும்ராவை பாராட்டியே பேசியிருக்கிறார். ஆனால் அவர் பும்ராவை வேகப்பந்து வீச்சு உஸ்மான் தாரிக் என சொன்னதுதான் தற்பொழுது சர்ச்சையாக மாறி உள்ளது. பும்ரா அவரைப் போல வித்தியாசமான ஆக்சன் கொண்டு இருக்கிறார் என்று நேரடியாக சொல்லாமல், இப்படி கூறியிருப்பது சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

அதே சமயத்தில் உஸ்மான் தாரிக் ஆக்சன் வித்தியாசமாக இருந்தாலும் கூட இன்னும் அவர் பும்ரா செய்ததில் 10 சதவீதம் கூட செய்யவில்லை. எனவே பந்துவீச்சு ஆக்சன் வித்தியாசமாக இருப்பதற்காக இருவரையும் ஒப்பீடு செய்திருக்கக் கூடாது என ரசிகர்கள் கூறுகிறார்கள்.

- Advertisement -

இருவரும் இப்படியானவர்கள்

இதுகுறித்து அகிப் ஜாவேத் பேசும்பொழுது “தற்போது வேகபந்துவீச்சாளர்களில் வித்தியாசமான ஒருவராக பும்ரா மட்டுமே நடந்து முடிந்த உலகக் கோப்பையில் இருந்தார். ஏனென்றால் அவர் வித்தியாசமானவர். மேலும் சாதாரணமானவர் கிடையாது. அவருடைய பந்துவீச்சு ஆக்சன் கூட வழக்கத்திற்கு மாறானது. அவர் பந்துவீச்சுக்கு வரும் பொழுது நான் எப்பொழுதும் சொல்வது அவர் வேகப் பந்து வீச்சு உஸ்மான் தாரிக் என்றுதான்”

இதையும் படிங்க : நான் ஏற்கனவே கம்பீர் பற்றி சொல்லி இருக்கேன்.. இந்த விஷயத்துல இன்னும் மேம்படனும் – கங்குலி பேச்சு

“அவர் மிகவும் வேகமான முறையில் தனித்துவமான வகையில் பந்து வீசுகிறார். அதனால் ஒரு பேட்ஸ்மேனுக்கும் அவருக்கு எதிராக ஒரு ப்ளோ கிடைப்பதில்லை. எளிமையாக சொன்னால் ஒரு பேட்ஸ்மேன் அவருக்கு எதிராக செட்டாகி விளையாடும் வாய்ப்பை அவர் எப்போதும் கொடுப்பதில்லை” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -