நான் இல்லாம மும்பையை கண்டு பயமில்லாம போயிடுச்சுல… சீக்கிரமே வரேன் – குஜராத் மும்பையை வீழ்த்திய பிறகு மாஸான அப்டேட் கொடுத்த பும்ரா!

0
2919

‘விரைவாக வருகிறேன்.’ என்று இரண்டாவது குவாலிபயர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் தோல்வியடைந்த பிறகு அப்டேட் கொடுத்திருக்கிறார் பும்ரா.

இந்திய அணிக்கும், ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக இருந்து வருபவர் ஜஸ்பிரித் பும்ரா. இவர் கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக சர்வதேச போட்டிகளில் இருந்து விலகி அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.

- Advertisement -

கடந்த டிசம்பர் மாதமே குணமடைந்து விட்டார். அடுத்த ஓரிரு வாரங்களில் சர்வதேச போட்டிகளுக்கு வந்து விடுவார் என்றும் கூறப்பட்டது. அதைத்தொடர்ந்து நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடர், இலங்கை அணிக்கு எதிரான தொடர் மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் என எதிலும் அவர் விளையாடவில்லை.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பு பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது மீண்டும் காயம் ஏற்பட்டுவிட்டதால் அதற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்போகிறார் என்கிற அப்டேட்கள் கொடுக்கப்பட்டன. இதனால் கிட்டத்தட்ட 50-ஓவர் உலகக்கோப்பை வருவதற்கு இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்பு மீண்டும் பயிற்சிக்கு வருவார் என்கிற பேச்சுக்களும் அடிபட்டன. தற்போது வரை இது குறித்த உறுதியான தகவல்கள் வரவில்லை.

இந்த வருடம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆர்ச்சர் மற்றும் பும்ரா போன்ற முக்கியமான பவுலர்கள் காயம் காரணமாக இல்லாமல் போனது பெரிய பின்னடைவை பந்துவீச்சில் தந்தது. குறிப்பாக இரண்டாவது குவாலிபயர் போட்டியில் பந்துவீச்சில் நிறைய ரன்களை வாரிக்கொடுத்து அதை சேஸ் செய்ய முடியாமல் பைனலுக்குள் செல்லாமல் ஐபிஎல் தொடரை விட்டு வெளியேறியது. இதனால் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் கடும் அதிருப்திக்கு உள்ளாகினர்.

- Advertisement -

இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியடைந்து வெளியேறிய பிறகு, உடனடியாக தனது சமூகவலைதள பக்கத்தில் சூசகமாக அப்டேட் கொடுத்திருக்கிறார் ஜஸ்பிரீட் பும்ரா. தனது ஷூ புகைப்படத்தை பதிவிட்டு, “விரைவில் சந்திப்போம்.” என்றும் பதிவிட்டு இருந்தார்.

இதைவைத்து பார்க்கையில், பும்ரா பயிற்சியில் ஈடுபடப் போகிறார் என்று தெரிய வந்திருக்கிறது. விரைவாக இந்திய அணிக்குள் வந்துவிடுவார் என்றும் பேச்சுக்கள் அடிபடுகின்றன. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளிவரவில்லை என்றாலும், நம்மால் சூசகமாக புரிந்துகொள்ள முடிகிறது.

பும்ரா மீண்டும் இந்திய அணிக்கு வரும் பட்சத்தில், டெத் ஓவரில் சந்தித்து வரும் சிக்கலில் இருந்து வெளிவரும். மேலும் உலகக்கோப்பையில் இந்திய அணியின் பவுலிங்கை பலப்படுத்துவார் என்றும் கூறப்படுகிறது.