மீண்டும் அறுவை சிகிச்சை.. சாம்பியன்ஸ் கோப்பை மட்டுமல்ல ஐபிஎல் தொடருக்கே பும்ரா கிடையாது? மருத்துவர்கள் சிகிச்சை

0
842

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ரா கடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் முதுகு தசை பிடிப்பு காரணமாக பாதியில் வெளியேறினார். இந்த டெஸ்ட் போட்டியில் பும்ரா வெறும் பத்து ஓவர்கள் தான் பேசியிருந்தார்.

ஒருவேளை பும்ரா கடைசி டெஸ்ட் போட்டியில் முழுமையாக உடல் தகுதியுடன் இருந்து பந்து வீசி இருந்தால், ஒரு வேலை இந்தியா வெற்றி பெற அதிக வாய்ப்பு இருந்திருக்கும் என கவாஸ்கர் கூறியிருந்தார். அந்த வகையில் பும்ரா, ஆஸ்திரேலியாவில் இந்தியாவின் பந்துவீச்சை தனது தோளில் சுமந்து கொண்டு தனி ஆளாக போராடினார். ஐந்து டெஸ்ட் போட்டிகளில் பும்ரா 32 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடர் நாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு பும்ரா சந்தேகம்:

இந்த நிலையில் நடத்தப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் எந்த பெரிய காயமும் ஏற்படவில்லை என்று முதல் கட்ட தகவல் வெளியாகி இருந்தது. எனினும் பும்ரா ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தனர். இதன் காரணமாக வரும் ஜனவரி மாதம் 22 ஆம் தேதி தொடங்க உள்ள இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலும் அதன் பிறகு நடைபெற உள்ள ஒரு நாள் தொடரிலும் பும்ரா பங்கேற்க மாட்டார் என்று செய்திகள் வெளியானது.

அது மட்டுமில்லாமல் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பும்ரா பங்கேற்க மாட்டார் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் தான் தற்போது பும்ரா தொடர்பாக மேலும் ஒரு தகவல் கிடைத்திருக்கிறது. அதன்படி பும்ரா சாம்பியன்ஸ் கோப்பை தொடர் முழுவதும் பங்கேற்க மாட்டார் என்றும், ஐபிஎல் தொடரிலும் பும்ரா பங்கேற்பது சந்தேகம் தான் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

அறுவை சிகிச்சை செய்தால் 6 மாதம் ஓய்வு:

பும்ரா தற்போது அறுவை சிகிச்சை நிபுணரை சந்தித்து தமது காயம் குறித்து ஆலோசனை செய்து வருவதாகவும் இதற்கு மருத்துவர்கள் தற்போது முதல் கட்ட சிகிச்சை அளிப்பதாகவும் தெரிகிறது. ஒருவேளை பும்ராவுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற நிலை வந்தால் அவர் மேலும் ஆறு மாதத்திற்கு இந்திய அணிக்கு திரும்ப வாய்ப்பில்லை.

இதன் காரணமாக சாம்பியன்ஸ் கோப்பை, ஐபிஎல் தொடர் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் உள்ளிட்ட அனைத்து போட்டிகளிலும் விலக வாய்ப்பு இருக்கிறது. பும்ரா அறுவை சிகிச்சை செய்தால்  வரும் நவம்பர் மாதம் நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான t20 போட்டியில் தான் விளையாட கூடும். இதனால் பும்ரா என்ன செய்யப் போகிறார் என்று கேள்வி எழுந்துள்ளது.

- Advertisement -