சிங்கம் மீண்டும் ரெடி.. பும்ரா உடல்தகுதி குறித்து அப்டேட்..எப்போது களமிறங்குகிறார்?

0
307

இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த வேக பந்துவீச்சாளராக விளங்கும் ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக டி20 உலக கோப்பை தொடரிலிருந்து விலகினார். இதன் காரணமாக அரையிறுதி வரை சென்று தோல்வியை தழுவியது. இதனை தொடர்ந்து நடைபெற்ற நியூஸிலாந்து மற்றும் வங்கதேச தொடரிலும் பும்ரா இருக்கவில்லை.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய அணி அடுத்த ஆறு மாதத்தில் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க இருக்கிறது. ஜனவரி மாதம் இந்தியா இலங்கைக்கு எதிரான மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளும், எந்த இடைவெளியும் இன்றி நியூசிலாந்துக்கு எதிராக மூன்று டி20 மற்றும் ஒரு நாள் போட்டி என 29 நாட்களில் 12 போட்டிகள் நடைபெறுகிறது. இது முடிந்தவுடன் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4 டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் நடைபெறுகிறது.

இதில் இந்தியா வென்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும் . இந்த நிலையில் காயம் காரணமாக இரண்டு மாதம் ஓய்வில் இருந்து பும்ரா தனது முழு உடல் தகுதியை எட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதனால் பும்ரா இந்திய அணியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் உடனடியாக இலங்கை மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக களமிறக்கி அவருக்கு பெரிய வேலை வைக்காமல் , கொஞ்சம் கொஞ்சமாக அவருக்கு மேட்ச் பிராக்டிஸ் கிடைக்கும் படி பிசிசிஐ நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழந்துள்ளது.ஏனெனில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பும்ராவின் முக்கியத்துவம்  பெரிய அளவில் இருக்கின்றன.

அந்த நிலையில் அவர் திடீரென்று மீண்டும் காயம் காலமாக சென்றால். இந்திய அணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் பும்ராவை பத்திரமாக கையாள வேண்டும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.இந்த ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை போட்டிகள் இந்தியாவில் நடைபெறுவதால் பும்ரா அதில் கண்டிப்பாக இடம் பெற வேண்டும் .பும்ரா மீண்டும் கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளார் என்ற செய்தி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

- Advertisement -