இங்கிலாந்து அணிக்கு எதிராக சிக்ஸர் அடித்து மாஸ் காட்டிய பும்ரா

0
2682
Jasprit Bumrah Six

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி இங்கிலாந்து எதிர்த்து 5 போட்டிகள் கொண்ட தொடரை ஆடி வருகிறது. அதன் முதல் டெஸ்ட் மேட்ச் இரண்டு நாட்களுக்கு முன்பு டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியின் அட்டகாசமான பௌலிங் காரணமாக இங்கிலாந்து வீரர்களில் பலர் வருவதும் போவதுமாக இருந்தனர். 4 இங்கிலாந்து வீரர்கள் ரன் கணக்கை துவங்காமலேயே டக் அவுட் ஆகினர். பும்ரா குறிப்பாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

பின்பு இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த இந்திய அணிக்கு வெளிநாடுகளில் எப்போதும் இல்லாத வண்ணமாக இந்த முறை சிறந்த துவக்கம் கிடைத்தது. ரோஹித்தும் கேஎல் ராகுவும் இணைந்து அட்டகாசமான தொடக்கத்தை கொடுத்தனர். ரோகித் உணவு இடைவேளைக்கு ஒரு பந்து இருக்கையிலேயே ஆட்டமிழக்க, பின்பு வந்த புஜாரா விராட் கோலியை ஆண்டர்சன் அடுத்தடுத்து அவுட் ஆக்கினார். இங்கிலாந்து மறுபடியும் ஆட்டத்திற்குள் வரும் சூழலில் இருக்கும்போது ஜடேஜா மற்றும் கேஎல் ராகுல் இணைந்து இந்திய அணியை அற்புதமாக மீட்டனர்.

- Advertisement -

இந்திய அணியின் ஸ்கோர் 232 என்று இருந்தபோது ஜடேஜா வெளியேறினார். ஜடேஜாவின் விக்கெட்டுக்கு பிறகு கைவசம் பும்ரா மற்றும் சிராஜ் என்று இரண்டு விக்கெட்டுகள் தான் இருந்தனர். இந்திய அணியின் ரன்கள் இதோடு முடிந்து விட்டது என்று பலர் எதிர்பார்த்த போது என்னால் பேட்டிங்கும் செய்ய முடியும் என்று களத்திற்குள் வந்தார் ஜஸ்ப்ரீத் பும்ரா.

சிக்ஸர் அடித்து மாஸ் காட்டிய பும்ரா

சிறிது நேரம் மௌனம் காத்தவர் குர்ரன் பந்துவீச்சில் தனது சாகசங்களைக் காட்ட ஆரம்பித்தார். சாம் குர்ரன் வீசிய 82வது ஓவரின் முதல் பந்தை மிட் விக்கெட் திசையில் அடித்து பவுண்டரி ஆக மாற்றினார் அடுத்த பந்தை அற்புதமாக ஒரு புல் சாட்டு மூலமாக சிக்சருக்கு பறக்க விட்டார். அதற்கு அடுத்த பந்தை குர்ரன் அழகாக வீசினாலும் அதை பும்ரா லாவகமாக அடிக்க ஸ்லிப் பீல்டர்களுக்கு மேலே சென்று பவுண்டரி ஆக மாறியது அடுத்த பந்தும்.

இதுவரை பந்துவீச்சில் மட்டுமே அசத்தி கொண்டிருந்த பும்ராவின் பேட்டிங்கை பார்த்து பல இந்திய ரசிகர்கள் வியந்து பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

- Advertisement -