டி20ஐயில் உலகில் எந்த ஒரு பவுலரும் படைக்காத சாதனையை செய்துள்ள ஜஸ்பிரித் பும்ரா !

0
178
Jasprit Bumrah

இந்திய இங்கிலாந்திற்குப் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட் போட்டியில் சமீபத்தில் விளையாடிய பொழுது, கோவிட்டால் கேப்டன் ரோகித் சர்மா விளையாட முடியாமல் போக, கேப்டன் பொறுப்பை ஏற்க, கபில்தேவிற்குப் பிறகு கேப்டன் பொறுப்பை பெற்றவர் என்ற சிறப்பை பெற்றார்!

மேலும் இந்த டெஸ்ட் போட்டியில் விளையாடி விக்கெட்டுகளை வீழ்த்தியதின் செளத் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் சேர்த்து குறைந்த போட்டிகளில் நூறு விக்கெட்டுகளை வீழ்த்திய ஆசிய பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் நிகழ்த்தினார்.

- Advertisement -

முன்னாள் இந்திய தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இவரால் டெஸ்ட் போட்டிகளில் சாதிக்க முடியும் என்று உறிதியாக நம்பி 2018ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணிக்குள் கொண்டுவந்தார். அன்று முதல் மேற்கண்ட நாடுகளில் இவரது பந்துவீச்சு மிகச்சிறப்பானதாய் இருக்கிறது!

இன்று உலகின் எந்த நாட்டு ஆடுகளத்திலும், எந்த அணிக்கு எதிராகவும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு படையால் சவால் அளிக்க முடிவதற்கு ஜஸ்ப்ரீட் பும்ராவின் வருகை ஒரு மிக முக்கியக் காரணம். குறைந்த தூர ஓட்டத்தில், வித்தியாசமான பந்துவீச்சி முறையில், மணிக்குத் தொடர்ச்சியாக 140 கி.மீட்டருக்கு மேல் வீசும் பும்ரா எளிதில் காயமடைவார் என்று பல முன்னாள் ஜாம்பவான்கள் கூறியபோதும், இதுவரையில் பும்ரா மிகச்சிறப்பாகவே பந்து வீசி வருகிறார்.

2012ஆம் ஆண்டு குஜராத் மாநில அணிக்காகக் களம் கண்ட பும்ராவை, 2013ஆம் ஆண்டு மும்பை இன்டியன்ஸ் அணி இணைத்துக்கொண்டு, அவரைப் பட்டைத் தீட்ட ஆரம்பித்தது. அங்கு தனது சிறப்பான செயல்பாட்டால் 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராகவும், அடுத்து உடனே ஆஸ்திரேலியா அணிக்கு எதிராகவே டி20 போட்டியிலும் இந்திய அணிக்காக அறிமுகம் ஆனார்.

- Advertisement -

இங்கிலாந்தில் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடியதால் ஓய்விலிருந்த ஜஸ்பீரிட் பும்ரா நேற்று இரண்டாவது டி20 போட்டியில் களமிறங்கினார். இந்தப் போட்டியில் மூன்று ஓவர்கள் வீசி அதில் ஒரு ஓவரை மெய்டனாக்கி இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இதன் மூலம் அவரது உலகச் சாதனை பெரிதாகிக்கொண்டே போகிறது. என்னவென்றால் சர்வதேச டி20 போட்டியில் அதிக மெய்டன் ஓவர்கள் வீசியவர் என்ற சாதனைதான் அது. இதுவரையில் பும்ரா 9 மெய்டன் ஓவர்களை வீசி இருக்கிறார்.

டெஸ்ட் அந்தஸ்து பெற்ற நாடுகளைச் சேர்ந்த வீரர்களில் அதிக மெய்டன் ஓவர்களை சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வீசிய ஐந்து பந்துவீச்சாளர்கள்;

ஜஸ்ப்ரீட் பும்ரா – இந்தியா – 9
நுவன் குலசேகரா – இலங்கை – 6
முஸ்தாபிசூர் ரகுமான் – பங்களாதேஷ் – 6
ஹர்பஜன் சிங் – இந்தியா – 5
ஹசன் அலி – பாகிஸ்தான் – 5