இந்திய கிரிக்கெட்

பாகிஸ்தான் கோச் பதவி.. இதனால் தான் நானும் ராஜினாமா செய்தேன்.. என்னால முடியல – ஜேசன் கில்லஸ்பி வருத்தம்

பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து தான் விலகியதற்கு என்ன காரணம் என்பது குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஸ்டேஷன் கில்லஸ்பி வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதற்கு முன்பாக பாகிஸ்தான் வெள்ளை பந்து அணிகளுக்கு தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்று இருந்த தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் கேரி கிறிஸ்டன் 6 மாதத்தில் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்து விட்டு வருத்தத்துடன் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

ஜேசன் கில்லஸ்பி கூட்டி வந்த நபர்

ஜேசன் கில்லஸ்பி பாகிஸ்தான் டெஸ்ட் அணிக்கு தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட பிறகு, உயர் செயல்திறன் பயிற்சியாளராக தங்கள் நாட்டின் டிம் நீல்சனை கொண்டு வந்தார். பாகிஸ்தான் உள்நாட்டு வீரர்களுக்கும் பயிற்சி அளிக்கக்கூடிய இடத்தில் இருப்பதால், இந்த பொறுப்புக்கு வெளிநாட்டு வீரர் சரிவர மாட்டார் என எதிர்ப்புகள் பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் இடையே கிளம்பியது.

இதற்கு அடுத்து ஜேசன் கில்லஸ்பி உடன் கலந்து ஆலோசிக்காமல் டிம் நீல்சனை பதவியில் இருந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நீக்கியது. மேலும் அகிப் ஜாவேத்தை மெண்டர் பொறுப்புக்குள் கொண்டு வந்தது. இதெல்லாம் தலைமை பயிற்சியாளர் கில்லஸ்பியின் அதிகாரம் மற்றும் பொறுப்பை குறைப்பதாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

வெளியேறியதற்கான காரணம் இதுதான்

இது குறித்து பேசி இருக்கும் கில்லஸ்பி கூறும் பொழுது ” ஒட்டகத்தின் முதுகை முறித்த வைக்கோலின் கதையாக இது மாறிவிட்டது. நீங்கள் ஒரு தலைமை பயிற்சியாளராக உங்களுடைய முதலாளியின் தெளிவான தொடர்பையும் உரையாடலையும் பெறுவதற்கு முயற்சி செய்கிறீர்கள்.ஆனால் உதவி பயிற்சியாளர் நீல்சனை என்னிடம் எந்தவித முறையில் ஆலோசனைக்காமல் நீக்கினார்கள். கடந்த சில மாதங்களாக நடந்த விஷயங்களை யோசித்தேன். நான் இந்த பொறுப்பில் இருக்க வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்களா? என்று எனக்குத் தெரியவில்லை”

இதையும் படிங்க : 147 ஆண்டு.. 658 ரன்.. முதல் வீரராக வில்லியம்சன் மெகா ரெக்கார்ட்.. நியூஸி முன்னிலை.. இங்கிலாந்து அணிக்கு பின்னடைவு 

“எனது ரோல் வெகுவாக குறைக்கப்பட்டு விட்டது. அணி தேர்வு விஷயத்தில் நான் வெளியேற்றப்பட்டு விட்டேன். ஒரு போட்டிக்கு முன்பாக நாம் திட்டங்கள் தீட்டுவதற்கு சம்பந்தப்பட்ட எல்லோருடனும் தொடர்பு கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். இதெல்லாம் சேர்ந்து நான் இனி இந்த பதவியில் தொடர முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டேன். எனவே நான் பொறுப்பை ராஜினாமா செய்து விட்டேன்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by