நடப்பு சாம்பியன்ஸ் டிராபியில் ஆஸ்திரேலியா அணியை பார்த்து இந்தியா அணி நாக் அவுட் போட்டியில் பயப்படும் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஜேசன் கில்லஸ்பி கூறியிருக்கிறார்.
தற்போது இந்திய அணி இடம் பெற்று இருக்கும் குழுவில் இருந்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்று இருக்கின்றன. இன்னொரு குழுவில் இருந்து தற்போதைக்கு தென் ஆப்பிரிக்கா மட்டுமே அரை இறுதிக்கு தகுதி பெற்று இருக்கிறது. ஆப்கானிஸ்தான் அணியை இன்றைய போட்டியில் வென்றால் ஆஸ்திரேலிய அணியும் அரை இறுதிக்கு தகுதி வரும்.
இந்திய அணி பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த முறை சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட பாகிஸ்தானுக்கு செல்லவில்லை. இதன் காரணமாக இந்திய அணி விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாய் சர்வதேச மைதானத்தில் மட்டுமே நடத்தப்படும். இந்திய அணி அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி முதல் கொண்டு எல்லா போட்டிகளையும் ஒரே மைதானத்தில் விளையாடுகிறது.
இந்த நிலையில் முன்னாள் வீரர்களும் மற்றும் தற்போது சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடும் சில வீரர்களும் இந்திய அணி ஒரே மைதானத்தில் விளையாடி ஒரே ஹோட்டலில் தங்குவது அவர்களுக்கு மிகப்பெரிய சாதகத்தை கொடுத்துக் கொண்டு வருவதாக விமர்சனம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது ஜேசன் கில்லஸ்பியும் தனது விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்.
இது குறித்து ஜேசன் கில்லஸ்பி கூறும் பொழுது ” இந்திய அணி துபாயில் ஒரே மைதானத்தில் விளையாடுவது அவர்களுக்கு நன்மையை கொடுக்கும். இதன் காரணமாக அவர்களுக்கு விக்கெட் எப்படி இருக்கிறது மற்றும் அங்குள்ள கண்டிஷன் எப்படி இருக்கிறது என்பது முழுவதுமாக தெரிந்து விடும். அடுத்து பொதுவாக சாம்பியன்ஸ் டிராபி தொடர் வீரர்களுக்கு மிகவும் அர்த்தமுள்ள ஒரு தொடர்”
இதையும் படிங்க : இங்கிலாந்து அணியில் மார்க்கெட்டிங் மட்டும் தான் நடக்குது.. சுயபரிசோதனை செய்யுங்க.. அஸ்வின் கருத்து
“தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டது. இந்திய அணியை பொறுத்தவரையில் அவர்களை வீழ்த்துவது மிகவும் கடினமான ஒரு விஷயம். அதே சமயத்தில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை பார்த்து பயப்படும்” என்று கூறியிருக்கிறார்.