மீண்டும் ஜார்வோ சேட்டை – பேட்டிங் செய்து கொண்டிருந்த இங்கிலாந்து வீரர் மீது மோதியதால் பரபரப்பு

0
1239
Jarvo in 4th Test

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆடி வருகிறது. முதல் மூன்று போட்டிகளின் முடிவில் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. 4வது போட்டி தற்போது ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது இந்த ஆட்டத்தில் வெல்லும் அணி தொடரில் முன்னிலை பெறும். இதன் காரணமாக இரண்டு அணிகளுமே வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்புடன் சிறப்பாக ஆடி வருகிறது. ரசிகர்களுக்கும் ஆட்டம் விறுவிறுப்பாக செல்வதன் காரணமாக மிகவும் கொண்டாட்டமான சூழல் நிலவி வருகிறது.

இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் காஸ் என்று இந்தியாவை பேட் செய்ய அழைத்தார் .முதல் இன்னிங்சில் இந்திய அணி வேறு கேப்டன் கோலி அரை சதம் அடித்தாலும் இந்திய அணியால் 200 ரன்களைக் கூட தாண்ட முடியவில்லை. மிடில் ஆடர் வீரர்கள் என்னதான் மோசமாக விளையாடினாலும் மும்பையைச் சேர்ந்தவரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடிய வீரருமான ஷர்தூல் தாகூரின் சிறப்பான அரை சதத்தால் இந்திய அணி 191 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

பின்பு தனது முதல் இன்னிங்சை இங்கிலாந்து அணி ஆடி வருகிறது. இங்கிலாந்தின் டாப் ஆர்டர் வீரர்கள் வேகமாக வெளியேறி விட்டாலும், மிடில் ஆடர் வீரர்களான பேர்ஸ்டோ மற்றும் போப் இணைந்து சிறப்பாக ஆடி வருகிறார்கள். இந்த எண்ணையை பிரிக்க கேப்டன் விராட் கோலி எடுத்து வரும் அனைத்து முயற்சிகளும் வீணாகி வருகிறது.

ஆட்டத்தின் முப்பத்தி நான்காவது ஓவரை உமேஷ் வீசிக் கொண்டிருக்கும்போது ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது. என்ன என்று பலரும் திரும்பிப் பார்க்கையில் கடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளின் போதும் குறிப்பிட்ட ஜார்வோ என்னும் ரசிகர் இந்த போட்டியின் போதும் குறிக்கிட்டு விட்டார். வேகமாக ஓடிவந்து பந்து வீசுவது போன்ற பாவனை செய்தார் ஜார்வோ.

மேலும் இந்த முறை பேட்டிங் செய்து கொண்டிருந்த இங்கிலாந்து வீரர் பேர்ஸ்டோவின் மீதும் மோதி விட்டார் ஜார்வோ. அதன் பின்பு பாதுகாப்பு வீரர்கள் அவரை அப்புறப்படுத்தினர். இது போன்று ஒருவர் தொடர்ந்து பாதுகாப்பு வலயங்களை மீறி இந்த கொரோனா காலத்தில் வீரர்கள் இருக்கும் மைதானத்திற்கு நுழைவது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -