சிக்சருக்கு செல்ல வேண்டிய பந்தை ஒரே கையால் தாவிப் பிடித்த மெல்போர்ன் வீரர் – சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ

0
202
Jake Fraser-McGurk Stunning Catch in BBL

ஆஸ்திரேலியாவில் தற்போது பிக் பேஷ் லீக் கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. தொடரின் மூன்றாவது ஆட்டத்தில் இன்று மெல்போர்ன் மற்றும் அடிலெய்ட் அணிகள் மோதின. டாஸ் வென்ற மெல்போர்ன் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணிக்கு ஹார்ப்பர் மற்றும் ஹார்வி இணைந்து சிறப்பான துவக்கம் கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 65 ரன்கள் சேர்த்த போது ஹார்ப்பர் ஷார்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். நன்கு விளையாடிக்கொண்டிருந்த ஹார்வியும் ரஷித் கான் பந்துவீச்சில் பவுல்ட் ஆனார். சிறிது நேரம் அதிரடி காட்டிய சீமார் 14 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆப்கானிஸ்தான் அணிகள் சீனியர் ஆல்ரவுண்டர் முகமது நபி பீட்டர் சிடில் பந்துவீச்சில் வெளியேறினார். கடைசி நேரத்தில் விக்கெட்டுகள் மடமடவென விழுந்ததால் மெல்போன் அணி 153 ரன்கள் மட்டுமே எடுத்தது.

154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களம் இறங்கிய அடிலைட் அணிக்கு, ஷார்ட் மற்றும் வெதரால்ட் இணைந்து துவக்கம் கொடுத்தனர். ஒரு பவுண்டரி 2 சிக்சருடன் என அசத்திய ஷார்ட் 18 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஏழாது ஓவரை வீசிய ஜாகீர்கான் பந்துவீச்சை வெதரால்ட் எதிர்கொள்ளும்போது, அடிப்பதற்கு சற்று வாகாக வந்த தந்தை மிகவும் சிறப்பாக தூக்கி அடித்தார். நிச்சயம் சிக்சருக்கு செல்லும் என்று இந்த வெதரால்ட் உட்பட அனைவரும் நினைத்து வந்த நிலையில் அதை பிரேசர் மெக்கர்க் என்னும் வீரர் ஒரு கையால் தாவிப் பிடித்து சிக்சருக்கு போக வேண்டிய பந்தை கேட்ச் தாக்கினார். சிக்ஸர் அடித்து விட்டதாக நினைத்த வெதரால்ட் பரிதாபமாக ஆட்டமிழந்து பெவிலியன் நோக்கி திரும்பினார்.

- Advertisement -

அடிலெய்ட் அணி சார்பில் வேறு எந்த வீரரும் சிறப்பாக விளையாடததால் அந்த அணி கடைசியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. மெல்போர்ன் அணிக்கு கிடைத்த இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் மெக்கர்க் பிடித்த அந்தக் கேட்ச் ஆகும். நிச்சயம் சிக்சருக்கு சென்றுவிடும் என்று பலரும் நினைத்த நிலையில் அதை சிறப்பாக கேட்ச் பிடித்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிர்ந்து வருகின்றனர்.