ஐபிஎல் 2025

தம்பி டெல்லி ஓரளவுக்கு மேல பொறுத்துக்காது.. அதனால எப்படியாவது தப்பிச்சிடு – கில்கிறிஸ்ட் அறிவுரை

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு ஆஸ்திரேலிய இளம் வீரர் ஜாக் பிரேசர் மெக்கர்க் சிறந்த முறையில் துவங்காவிட்டால் பெரிய பிரச்சினைகளை அவர் சந்திக்க நேரிடும் என்பது குறித்து ஆடம் கில்கிறிஸ்ட் அறிவுரை கூறியிருக்கிறார்.

- Advertisement -

கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் நிர்வாகம் இவரை விடுவித்தது. பிறகு ஆர்டிஎம் மூலம் மீண்டும் ஏலத்தில் இவரை வாங்கியது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலும் இவர் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அறிமுக அசுரத்தனமான ஆட்டம்

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு 230 ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்து நொறுக்கினார். இதன் காரணமாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு தோல்வி பாதையில் இருந்து மீள்வதற்கு ஒரு வழி கிடைத்தது. இதன் காரணமாகவே அவரை இந்த ஆண்டும் தொடர்ந்து அந்த அணி நிர்வாகம் வாங்கியிருக்கிறது.

அதே சமயத்தில் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு பிறகு அமெரிக்க எம்எல்சி லீக், பிக்பேஸ் லீக், ஆஸ்திரேலிய தேசிய அணி என எதிலும் ரனகள் குவிக்கவில்லை. இதனால் அவருடைய பேட்டிங் ஃபார்ம் தற்பொழுது மிகவும் சுமாராக இருந்து வருகிறது. இது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கும் ஒரு பெரிய தலைவலியாக உருவாகி இருக்கிறது.

- Advertisement -

ஆடம் கில்கிறிஸ்ட் எச்சரிக்கை

இதுகுறித்து ஆடம் கில்கிறிஸ்ட் பேசும் பொழுது ” டெல்லி அணி அவரை தொடர்ந்து வைத்திருப்பதில் நல்ல நம்பிக்கை காட்டியது. அதே சமயத்தில் அவர் சிறப்பான முறையில் தொடங்க வேண்டியது மிகவும் முக்கியம். ஐபிஎல் தொடரைப் பொறுத்தவரையில் எனக்கு தெரிந்தது என்னவென்றால் நீங்கள் சரியாக விளையாடாவிட்டால், உங்கள் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் மேலும் உரிமையாளர் உங்களைத் தொடர்ந்து வைத்திருக்க மாட்டார்கள். நீங்கள் ஒரு போட்டியில் நன்றாக விளையாடினால், அது உங்களுக்கும் உங்களுடைய அனைத்தும் நல்லது. அது உங்களுக்கு கூடுதல் போட்டிகளை வாங்கி கொடுக்கும்”

இதையும் படிங்க : தோனியின் பவர் ஹிட்டிங் சிக்ஸ்க்கு காரணமே அதான்.. யாரும் கவனிக்காத ரகசியத்தை சொல்றேன் – ரெய்னா உடைக்கும் சீக்ரெட்

” கடந்த ஆண்டு டெல்லியில் அவருக்கு நல்ல தட்டையான ஆடுகளம் கிடைத்தது. அதை அவர் நல்ல முறையில் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார். இப்படி ஒரு ஆடுகளத்தில் விளையாடுவதற்கு நல்ல நிலைப்பாட்டுடன் தொடர்ந்து இருக்க வேண்டும். அவருக்கு ஐபிஎல் தொடர் தவிர வேறு எதுவும் சரியாக செல்லவில்லை. எனவே இந்த முறையும் ஐபிஎல் தொடரில் பேட்டிங் செய்ய சாதகமான டெல்லி ஆடுகளத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts