எப்படி வேணாலும் விளையாடுவேன்.. கலக்கும் ஜெய்ஸ்வால் அரைசதம்.. அறிமுக பவுலருக்கு தொடரும் சோகம்

0
142
Jaiswal

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மைதானத்தில் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டு வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி ஆடுகளத்தை கணித்து முதலில் பேட்டிங் செய்வது என தீர்மானித்தது. கேஎல்.ராகுல், ஜடேஜா, சிராஜ் இடங்களில் ரஜத் பட்டிதார், குல்தீப் யாதவ் மற்றும் முகேஷ் குமார் ஆகிய விளையாடுகிறார்கள்.

- Advertisement -

இங்கிலாந்து அணியின் தரப்பில் காயத்தால் ஜாக் லீச் மற்றும் மார்க் வுட் நீக்கப்பட்டு அறிமுக வீரர் சோயப் பஷீர் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

கடந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடிய இந்திய துவக்க ஜோடி ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் இந்த முறை சூழ்நிலையை கருத்தில் கொண்டு பொறுமையான முறையில் விளையாடினார்கள்.

அணியின் ஸ்கோர் 40 ரன்கள் இருந்த பொழுது அறிமுக சூழல் பந்துவீச்சாளர் சோயப் பஷீர் பந்துவீச்சில் போவிடம் கேட்ஸ் கொடுத்து கேப்டன் ரோஹித் சர்மா 14 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

அறிமுக பந்துவீச்சாளர்களுக்கு விக்கெட்டை தாரை பார்க்கும் இந்திய பேட்ஸ்மேன்களின் பாரம்பரிய பழக்கம் இந்த போட்டியிலும் மாறாமல் தொடர்ந்து வருகிறது. கடந்த போட்டியில் டாம் ஹார்ட்லிக்கு விக்கெட்டை கொடுத்தார்கள்.

இதற்கு அடுத்து வந்த கில் இந்த முறை பேக் புட் மற்றும் கிரீசில் இருந்து இறங்கி வந்து விளையாடுதல் என்று தன் பேட்டிங் அணுகுமுறையை மாற்றி மிகச் சிறப்பாக விளையாடினார். அரை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆண்டர்சன் பந்துவீச்சு தவறான முறையில் விளையாடும் மோசமாக விக்கெட்டை கொடுத்து 46 பந்தில் 34 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

ஆனாலும் ஒரு முனையில் தொடர்ந்து பொறுப்பான முறையில் விளையாட இளம் துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் சோயப் பஷீர் பந்துவீச்சில் சிக்ஸர் மற்றும் பவுண்டரி அடித்து தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார்.

இதையும் படிங்க : “பாகிஸ்தான் பிளேயர்ஸ் விளையாடுறது சம்பளத்துக்குதான்” – முன்னாள் பயிற்சியாளர் குற்றச்சாட்டு

தற்பொழுது ஜெய்ஸ்வால் காட்டும் நம்பிக்கையான பேட்டிங்கால் இந்திய அணி இந்த முதல் பகுதி ஆட்டத்தில் இங்கிலாந்து விட கொஞ்சம் முன்னணியில் இருக்கிறது. ஜெய்ஸ்வால் 51, ஸ்ரேயாஸ் ஐயர் 4 ரன்கள் என களத்தில் இருக்க, இந்திய அணி மதிய உணவு இடைவேளைக்கு முன்பு இரண்டு விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்திருக்கிறது.