23 ஓவரில் பாஸ்பால் விளையாடிய ஜெய்ஸ்வால்.. இந்தியா முதல் நாளில் வலுவான முன்னிலை.. இங்கிலாந்து பின்னடைவு

0
500
Jaiswal

சில ஆண்டுகளாக இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணி ஸ்டோக்ஸ் தலைமையில், மெக்கலம் பயிற்சியில் அதிரடியான முறையில் விளையாடுகிறது. இந்த அதிரடியான முறை மீடியாக்களால் பாஸ்பால் என அழைக்கப்படுகிறது.

எனவே சுழல் வந்து பீச்சுக்கு சாதகமான இந்தியாவில் இவர்களது டெஸ்ட் கிரிக்கெட் பாஸ்பால் அணுகுமுறை எப்படி இருக்கும் என பொதுவான கிரிக்கெட் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

- Advertisement -

இந்த நிலையில் இந்த இரண்டு அணிகளும் மோதிக் கொள்ளும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று ஹைதராபாத் மாநகரத்தில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் துவங்கியது.

இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆடுகளம் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கின்ற காரணத்தினால் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இங்கிலாந்து துவக்க ஜோடி ஜாக் கிரவுலி 20, பென் டக்கெட் 35 என முதல் விக்கட்டுக்கு 55 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தந்தார்கள். இதற்கு அடுத்து ஜானி பேர்ஸ்டோ 37, ஜோ ரூட் 29 என சிறிய ரன் பங்களிப்பு கொடுத்தார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் தனியாக போராடிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 88 பந்துகளில் அதிரடியாக 70 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 246 ரன்கள் எடுத்து சுருண்டது. அஸ்வின் ஜடேஜா தலா மூன்று விக்கெட் கைப்பற்றினார்கள். மேலும் பும்ரா மற்றும் அக்சர் படேல் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.

இதற்கு அடுத்து தனது முதல் இன்னிங்சை துவங்கிய இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் அதிரடியான துவக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். இந்திய அணி 6.4 ஓவரில் 50 ரன்கள் கடந்தது. சிறப்பாக விளையாடிய ஜெய்ஷ்வால் 48 பந்துகளில் ஏழு பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்களுடன் அரை சதத்தை கடந்தார்.

இந்திய அணி தனது முதல் விக்கெட்டாக ரோஹித் சர்மா விக்கெட்டை 24 ரன்களில் அணி 81 ரன்கள் எடுத்திருக்கின்ற பொழுது இழந்தது. இதற்கு அடுத்து மூன்றாவது வீரராக கில் களத்திற்கு வந்தார்.

மேலும் விக்கட்டுகளை ஏதும் இந்திய அணி கொடுக்காமல் 23 ஓவர்களில் 119 ரன்கள் ஒரு விக்கெட் இழப்புக்கு எடுத்திருக்கிறது. ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடி 70 பந்துகளில் ஒன்பது பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் உடன் 76 ரன்கள் எடுத்தும், கில் 43 பந்தில் 14 ரன்கள் எடுத்தும் களத்தில் நிற்கிறார்கள்.

இதையும் படிங்க : வெறும் 13 ஓவர்.. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் நடந்த வினோதம்.. இங்கிலாந்து பரிதாபம்.. இந்தியாவுக்கு அதிர்ஷ்டம்

எல்லோரும் இங்கிலாந்து எப்படி அதிரடியாக பாஸ் பால் விளையாடும் என்று நினைத்திருந்தபோது, ஜெய்ஸ்வால் தனி வீரராக இங்கிலாந்துக்கு எதிராக பாஸ்பால் விளையாடி காட்டி இருக்கிறார்.