தற்போது இந்திய ஏ அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து அதிகாரப்பூர்வமற்ற மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட போட்டி டிரா ஆனது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 346 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் ரன் ஏதும் இல்லாமல் ஆட்டம் இழந்தார். துருவ் ஜுரல் சிறப்பாக விளையாடிய சதம் அடித்து 15 ரன்கள் எடுத்தார்.
இதற்கு அடுத்து விளையாடிய நியூசிலாந்து ஏ அணி அபாரமாக விளையாடி 424 ரன்கள் குவித்தது. இதைத் தொடர்ந்து களம் இறங்கிய இந்திய அணிக்கு படிக்கல் மற்றும் சாய் சுதர்சன் இருவரும் ஏமாற்றம் அளித்தார்கள்.
இதற்கு அடுத்து சிறப்பாக விளையாடிய இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 162 பந்துகளில் 15 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் ஆட்டம் இழக்காமல் 152 ரன்கள், யாஸ் ரத்தோட் 122 பந்துகளில் சதம் அடித்து 100 ரன்கள் எடுத்து களத்தில் நின்று போட்டியை டிரா செய்தார்கள்.
தற்போது பார்ம் இல்லாமல் தவித்து வந்த ஜெய்ஸ்வால் சதம் அடித்திருப்பது இந்திய அணிக்கு நல்ல விஷயமாக அமைந்திருக்கிறது. நாளை நியூசிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டி துவங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.






