இந்திய கிரிக்கெட்

16 வருட சிறப்பு.. கம்பீர் சாதனையை உடைத்த ஜெய்ஸ்வால்.. ஆஸியில் அமர்க்கள பேட்டிங்.. புது வரலாறு

இன்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அரை சதம் அடித்த ஜெய்ஸ்வால் கம்பீர் படைத்திருந்த 16 வருட இந்திய சாதனையை உடைத்திருக்கிறார்.

- Advertisement -

தற்போது மேற்கு ஆஸ்திரேலியா பெர்த் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று கொண்டு வருகிறது. இந்த போட்டியில் ஜெய்ஸ்வால் கம்பீர் உடைய சாதனையை முறியடித்திருக்கிறார்.

முதல் இன்னிங்ஸில் ஏமாற்றிய ஜெயஸ்வால்

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் இருந்து தொடக்க இளம் ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. பெரிய அளவில் அவர் ஆக்ரோஷமாக சென்று குறிப்பிடத்தக்க ரன்களை ஆஸ்திரேலியாவில் எடுப்பார் என்று பல கிரிக்கெட் வல்லுனர்கள் கூறினார்கள்.

இந்த நிலையில் ஜெய்ஸ்வால் முதல் இன்னிங்ஸில் ஏமாற்றம் அளிக்கும் விதமாக தவறான பந்தை விளையாடி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். ஆஸ்திரேலிய மீடியாக்கள் அடுத்த விராட் கோலி என்று அவரை குறிப்பிட்ட நிலையில் அவர் ஆட்டம் இழந்தது எல்லோருக்குமே பெரிய ஏமாற்றமாக அமைந்தது.

- Advertisement -

இரண்டாவது இன்னிங்ஸில் சாதனை

இந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக செயல்பட்டுள்ள ஜெய்ஸ்வால் தற்பொழுது வரை ஆட்டம் இழக்காமல் அரைசதம் அடித்து கேல்.ராகுலுடன் இணைந்து முதல் விக்கட்டுக்கு 100டன் பாட்னர்ஷிப் அமைத்து விளையாடிக் கொண்டு வருகிறார்.

இதன் மூலமாக சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் குவித்த இடது கை ஆட்டக்காரர் என்கின்ற சாதனையை படைத்திருக்கிறார். இதற்கு முன்பாக இந்த சாதனை 2008 ஆம் ஆண்டு கெளதம் கம்பீர் 16 இன்னிங்ஸ்களில் 1134 ரன்கள் எடுத்து வைத்திருந்தார். தற்போது ஜெய்ஸ்வால் 23 இன்னிங்ஸ்களில் 1156 ரன்கள் எடுத்து முறியடித்து இருக்கிறார்.

இதையும் படிங்க : ராணாவுக்கு விராட் கொடுத்த வேற லெவல் ஐடியா.. அடுத்த பந்தே லயன் அவுட்.. களத்தில் என்ன நடந்தது?

ஜெய்ஸ்வால் – 23 இன்னிங்ஸ் – 1156 ரன் – 2024
கவுதம் கம்பீர் – 16 இன்னிங்ஸ் – 1134 ரன் – 2008
சவுரவ் கங்குலி – 19 இன்னிங்ஸ் – 1106 ரன்கள் – 2007
சவுரவ் கங்குலி – 25 இன்னிங்ஸ் – 945 ரன்கள் – 2002
சவுரவ் கங்குலி – 15 இன்னிங்ஸ் – 848 ரன்கள் – 1997

- Advertisement -
Published by

Recent Posts