2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்.. கவாஜாவை கீழே இறக்கி, ஜெய்ஸ்வால் மாஸ் சம்பவம்

0
204
Jaiswal

தற்பொழுது 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சி நடைபெற்று வருகிறது. இதற்கான புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் நியூசிலாந்து அணியும், இரண்டாவது இடத்தில் இந்திய அணியும் இருக்கிறது.

இரண்டாவது இடத்தில் தொடர்ந்து வந்த ஆஸ்திரேலியா அணி மூன்றாவது இடத்திற்கு நேற்று இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக வெற்றி பெற்று கீழே இறக்கி விட்டிருக்கிறது.

- Advertisement -

முதல் இரண்டு அணிகள்தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இங்கிலாந்து தொடரில் இந்திய அணி மேலும் முன்னேறி செல்வது அவசியம்.

அதே சமயத்தில் ஆஸ்திரேலியா அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடர் தற்பொழுது விளையாட இருக்கிறது. இந்த டெஸ்ட் தொடரில் இரண்டு அணிகளில் யார் வென்று தோற்றாலும், இந்திய அணிக்கு அது எந்தவித பாதிப்பையும் உருவாக்காது.

மேலும் நடந்து இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் வெற்றி புள்ளி பட்டியலில் மட்டும் எதிரொலிக்காமல், நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் அதிகரின் அடித்தவர்கள் பட்டியலிலும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

- Advertisement -

தற்போது இந்த பட்டியலில் முதல் இடத்தில் ஆஸ்திரேலியாவின் துவக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா இருந்து வந்தார். நேற்று இங்கிலாந்துக்கு எதிராக இரட்டை சதம் அடித்ததின் மூலம் அவரை கீழே இறக்கி முதல் இடத்திற்கு ஜெய்ஸ்வால் முன்னேறி இருக்கிறார்.

இதில் குறிப்பிடத் தகுந்த விஷயம் என்னவென்றால் முதல் இடத்தில் இருக்கும் அவருக்கும் அடுத்தடுத்த இடங்களில் இருப்பவர்களுக்கும் இடையே நிறைய போட்டிகள் வித்தியாசம் இருக்கிறது.

இதையும் படிங்க :நீங்கதான் பெரிய அதிரடியா? ஜெய்ஸ்வால எப்படி அப்படி சொல்லலாம்?” – டக்கெட்டுக்கு மைக்கேல் வாகன் கேள்வி

2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியல் :

யஷஸ்வி ஜெய்ஸ்வால் – 861 (13).
உஸ்மான் கவாஜா – 855 (20).
ஜாக் கிராலி – 706 (15).
ஸ்டீவ் ஸ்மித் – 687 (20).