“ஜெய்ஸ்வால் ஜீனியஸ்.. நேற்று அந்த பையன் விளையாடினது சாதாரண ஆட்டம் கிடையாது!” – இந்திய முன்னாள் வீரர் வியப்பு பேச்சு!

0
3855
Jaiswal

நேற்று திருவனந்தபுரத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில், இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, தொடரில் முதல் இரண்டு போட்டிகளை வென்று முன்னிலை வகிக்கிறது.

இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்தது. ஆடுகளம் மெதுவாக இருந்ததோடு பந்து திரும்பவும் செய்தது. இந்த குறிப்பிட்ட ஆடுகளத்தில் பனி வருவதற்கு முன்பாக முதல் 10 ஓவர்கள் பேட்டிங் செய்வது கடினமானது.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் முதல் இரண்டு ஓவர்களை கொஞ்சம் மெதுவாக விளையாடினார். ஆடுகளம் எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொண்டார்.

பின்பு மூன்றாவது ஓவருக்கு மேக்ஸ்வெல் அடுத்து சீன் அப்பாட், நாதன் எல்லீஸ் என எல்லோரது ஓவரையும் அடித்து நொறுக்கி தள்ளிவிட்டார். அந்த ஆடுகளத்தில் நேற்று அவர் ஆடிய ஆட்டம் மிகவும் அபாரமான ஒன்று.

ஜெய் ஸ்வால் நேற்று 5.4 ஓவர்களில் பவர் பிளே முடிவதற்குள் 24 பந்தில் அரைசதம் அடித்தார். டி20 கிரிக்கெட்டில் இவ்வளவு வேகமாக அரை சதம் அடித்தவர்கள் இந்தியாவில் யாரும் கிடையாது. மேலும் பவர் பிளேவில் இந்திய அணி 77 ரன்கள் எடுக்க உதவியாக இவரது இன்னிங்ஸ் அமைந்தது.

- Advertisement -

இதன் காரணமாகவே ஆஸ்திரேலியா பேட்டிங் செய்ய வந்த பொழுது ஆடுகளம் பனிப்பொழிவால் பேட்டிங் செய்ய எளிமையாக இருந்தாலும் கூட, இந்திய அணியின் பந்துவீச்சாளர்களால் அவர்களை கட்டுக்குள் வைக்க முடிந்தது. காரணம் இந்திய அணி தேவைக்கு அதிகமாக 235 ரன்கள் குவித்திருந்தது.

இதுகுறித்து இந்திய முன்னால் வீரர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் துணை பயிற்சியாளர் அபிஷேக் நாயர் கூறும் பொழுது “முதல் இரண்டு ஓவர்கள் பேட்டிங் செய்த பொழுது ஆடுகளம் பேட்டிங் செய்ய சாதகமாக இல்லை என்று உணர்ந்ததால், நேற்று ஜெயஸ்வால் விளையாடியது ஜீனியஸ் நாக்!

மேக்ஸ்வெல் பந்து வீச வந்ததும் ஜெய்ஸ்வால் அப்பொழுதுதான் பெடலில் கால் வைத்தார். இன்று நாம் அவரை இரு பரிணாமத்தில் பார்த்தோம். தாமாகவே வேகத்தை உருவாக்கியதோடு பந்தில் வேகம் கிடைக்கும் பொழுது சிறப்பாகவும் விளையாடினார்.

அவர் தேர்டுமேன் திசையில் விளையாடுவதும், ஆடுகளத்தில் பக்கவாட்டு பகுதிகளில் விளையாடுவதும், மிட்விக்கெட் திசையில் ஆன்-சைட் மூலம் பவரை பெறுவதும் நீங்கள் பார்க்கலாம். நேற்று அவரிடம் இருந்து வந்தது மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட ஆனால் ஆக்ரோஷமான ஒரு அற்புதமான இன்னிங்ஸ்!” என்று பாராட்டி கூறியிருக்கிறார்!