ஜெய்ஸ்வால் இரட்டை சதம்.. இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை.. அபார சாதனை

0
714
Jaiswal

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மைதானத்தில் இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது நாளில் இன்று ஜெய்ஸ்வால் அபாரமாக விளையாடி இரட்டை சதம் அடித்து அசத்தியிருக்கிறார்.

நேற்று முதல் நாள் ஆட்டம் முடியும்பொழுது ஜெய்ஸ்வால் 179 ரண்களில் இருந்தார். இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 336 ரன்கள் எடுத்திருந்தது. உடன் நின்ற அஸ்வின் ஐந்து ரன்கள் எடுத்திருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் இன்று துவங்கி ஆட்டம் நடைபெற ரவிச்சந்திரன் அஸ்வின் 20 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்து விட்டார். அப்பொழுது 191 ரன்கள் எடுத்து ஜெய்ஸ்வால் களத்தில் நின்றிருந்தார்.

மேற்கொண்டு குல்தீப் யாதவ், பும்ரா மற்றும் முகேஷ் குமார் மட்டுமே இருக்கின்ற காரணத்தினால் இரட்டை சதத்தை எடுப்பது பெரிய சிக்கலாகிவிடும் என்பதை ஜெய்ஸ்வால் உணர்ந்தார்.

இதன் காரணமாக அடுத்த ஓவரில் ஒரு சிக்சர் ஒரு பவுண்டரி என தொடர்ந்து அடித்து தனது முதல் சர்வதேச டெஸ்ட் இரட்டை சதத்தை பதிவு செய்து அசத்தியிருக்கிறார்.

- Advertisement -

மொத்தம் 277 பந்துகளை சந்தித்த ஜெய்ஸ்வால் 19 பவுண்டரிகள் மற்றும் ஏழு சிக்ஸர்கள் உடன் இரட்டை சதத்தை எட்டி அசத்தி இருக்கிறார்.

இந்த இரட்டை சத்தத்தின் மூலம் மற்றவர் யாரும் 50 ரன்கள் அடிக்காத பொழுது இரட்டை சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்கின்ற அபார சாதனையை படைத்திருக்கிறார்.

மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த வயதில் சதம் அடித்த மூன்றாவது இந்திய வீரர் என்கின்ற சாதனையும் ஜெயஸ்வால் வசம் வந்து சேர்ந்திருக்கிறது.

ஜெய்ஸ்வால் 22 வயதில் இரட்டை சதத்தை அடிக்க, இவருக்கு முன்னால் 21 வயதில் வினோத் காம்ப்ளி மற்றும் சுனில் கவாஸ்கர் இருவரும் இரட்டை சதத்தை பதிவு செய்து முதல் இரண்டு இடங்களில் இருக்கிறார்கள்.

இதையும் படிங்க : “2 பேருக்கும் இன்னும் வாய்ப்பு கிடைக்குமா?.. என்ன நடக்குது?” – ஆகாஷ் சோப்ரா கருத்து

தற்பொழுது இந்திய அணி நானூறு ரண்களை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஆடுகளம் பேட்டிங் செய்ய சாதகமாக இருக்கின்ற காரணத்தினால் இந்திய அணி தற்பொழுது கொஞ்சம் பின்தங்கி இருக்கிறது என்றுதான் கூற வேண்டும்.