ஜடேஜா கேஎல்.ராகுல் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ரூல்ட் அவுட்.. மாற்று வீரர்கள் அறிவிப்பு

0
657
Jadeja

இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு தற்பொழுது இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் செய்திருக்கிறது.

இங்கிலாந்தின் இந்த சுற்றுப்பயணத்தில் ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை இங்கிலாந்து அணி வீழ்த்தி இருக்கிறது.

- Advertisement -

இதற்கடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் வருகின்ற பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி துவங்கி நடைபெற இருக்கிறது.

இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு இந்திய அணி அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அணியில் முதலில் இடம் பெற்று இருந்த விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக விலகிக் கொண்டார். அவர் கடைசி 3 போட்டிகளுக்கு அணியில் இணைகிறார்.

இந்த நிலையில் இந்திய அணி முதல் போட்டியில் தோற்றதோடு, தற்பொழுது பெரிய பின்னடைவை தரும் செய்தி ஒன்று வெளியாகியிருக்கிறது. நிச்சயம் இந்த அறிவிப்பு இந்திய அணியை இந்த டெஸ்ட் தொடரில் பின்னடைவுக்கு தள்ளினால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

- Advertisement -

இந்திய அணியின் முதுகெலும்பு வீரர்களான சுழற்பந்துவீச்சு ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மற்றும் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் கேஎல்.ராகுல் இருவரும் காயத்தால் டெஸ்ட் தொடரில் மொத்தமாக விலகி இருக்கிறார்கள்.

தற்பொழுது இவர்கள் இருவருக்கும் மாற்றாக தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் மற்றும் மும்பை மாநில அணிக்காக விளையாடி வரும் சர்ப்ராஸ் கான் இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்கள்.

மேலும் தற்போது விராட் கோலி இடத்தில் இடம்பெற்று இருக்கும் ரஜத் பட்டிதார் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பை பெறலாம் என்று தெரிகிறது.

விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, கேஎல்.ராகுல் மூவரும் இல்லாதது இந்தியா அணிக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இளம் இந்திய அணி எப்படி செயல்படுகிறது என்று பார்க்க வேண்டும்.