சென்னை அணியுடன் என்ன பிரச்சனை ? இரண்டே வார்த்தையில் வாய்யை அடைக்கும் பதிலை அளித்துள்ள ஜடேஜா

0
105
Ravindra Jadeja

இந்திய அணிக்கு இதுவரையில் கிடைத்த ஆல்ரவுண்டர்களில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் கபில்தேவ்தான் மிகச்சிறந்தவர். இவருக்குப் பிறகு பந்துவீச்சு, பீல்டிங், பேட்டிங் என ஒரு முழுமையான ஆல்ரவுண்டர் கிடைத்திருக்கிறார் என்றால் அது சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாதான். சமீபக் காலங்களில் தொடர்ச்சியாக அணிக்கு நல்ல பங்களிப்பைத் தருவதோடு, டெஸ்ட் போட்டிகளில் மிகச்சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடருக்கு முன்பு, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணி இந்தியா வந்திருந்த பொழுது, சுழற்பந்துக்குச் சாதகமான ஆடுகளத்தில் ஆட்டமிழக்காமல் பிரமாதமான 175 ரன் சதத்தை அடித்தார். ஐ.பி.எல் தொடருக்குப் பிறகு தற்போது இந்திய அணி இங்கிலாந்திற்கு மூன்று வடிவ கிரிக்கெட் தொடரிலும் பங்கேற்க இங்காலாந்திற்குச் சென்றுள்ளது.

- Advertisement -

இந்த இங்கிலாந்து தொடரில் முதலில் ஒரு டெஸ்ட் போட்டியில் கடந்த 5 ஆம் தேதி முதல் விளையாடி வரும் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 416 ரன்களை குவித்தது. ரிஷாப் பண்ட் உடன் இணைந்து இக்கட்டான நேரத்தில் 222 ரன் பார்ட்னர்ஷிப்பில் பங்கேற்ற ஜடேஜா சதமும் அடித்து அசத்தினார். 98 ரன்களுக்கு முக்கியமான ஐந்து விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தத்தளித்த போது, ஜடேஜா நின்று நிதானமாக ஆட்டத்தைக் கொண்டு சென்று அடித்த சதம் பல முன்னாள் வீரர்கள் புகழும் அளவில் சிறப்பானதாகவும், முக்கியமானதாகவும் இருக்கிறது.

இந்த நிலையில் ஐ.பி.எல் தொடரில் பாதியில் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி, காயம் என்று தொடரை விட்டு ஜடேஜா விலகியது சர்ச்சையானது பற்றி கேட்கப்பட்டது. அதற்கு ஜடேஜா கூறுகையில் “ஐ.பி.எல் தொடரில் என்ன நடந்தது என்பது என் மனதில் இல்லை. நீங்கள் இந்திய அணிக்காக விளையாடும் பொழுது, உங்கள் முழுக்கவனமும் இந்திய அணியில் இருக்க வேண்டும். நானும் அப்படிதான் இருந்தேன். இங்கிலாந்தின் கடினமான ஸ்விங்கிங் சூழலில் சதம் அடித்தது, ஒரு வீரராக என் நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது. எனக்கு இது நல்ல உணர்வைத் தருகிறது” என்று கூறினார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் “எங்கள் அணியின் நம்பர் 9, 10, 11 வீரர்கள் பேட்டிங் பயிற்சி செய்கிறார்கள். அவர்கள் நெட்டில் பேட்டிங் பயிற்சி செய்வதை அணி நிர்வாகம் உறுதி செய்கிறது. இவர்கள் அணிக்காக ரன் அடிப்பது நல்ல உணர்வைத் தரும். இந்த ரன்கள் அணிக்கு போனஸாகும். பும்ரா நெட்டில் தீவீரமாக பேட்டிங் பயிற்சி செய்வார். ஆனால் இயல்பாக இருப்பார். இதைக் களத்தில் வெளிப்படுத்தா பலன்களை அறுவடை செய்கிறார். கடைசியில் அவர் மற்றவர்களோடு சேர்ந்து அடித்த 40-50 ரன்கள் அணிக்கு போனஸ்” என்று கூறினார்!

- Advertisement -