எம்.எஸ்.தோனியை கலாய்த்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு சரியான பதிலடி கொடுத்த ரவீந்திர ஜடேஜா

0
5345
Jadeja Savage Reply to KKR

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி இன்று நடந்து முடிந்தது. போட்டியின் முடிவில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தவிர்த்து, போட்டியை சமன் செய்தது. இங்கிலாந்து அணியின் கடைசி விக்கெட்டை கைப்பற்ற ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அனைவரும் பிட்ச்சை சூழ்ந்து இங்கிலாந்து அணி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்தனர்.

ஸ்லிப், கல்லி, சில்லி பாயிண்ட், கவர், ஷார்ட் கவர், மிட் ஆன் மற்றும் மிட் ஆஃப் என மைதானத்தில் நின்று ஃபீல்டிங் செய்த 9 ஆஸ்திரேலிய வீரர்களும் ஒன்றாக இணைந்து நின்றுவாறு ஃபீல்டிங் செய்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்துடன் எம்எஸ் தோனியை ஒப்பிட்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சமூக வலைத்தளத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளது.

- Advertisement -

2016 ஆம் ஆண்டு நடந்த சம்பவத்தை நினைவு கூர்ந்த கொல்கத்தா அணி

2016 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரின் ஒரு லீக் போட்டியில் ரைசிங் புனே சூப்பர் ஜெயின்ட் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதியது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த புனே அனி பேட்ஸ்மேன்கள் அனைவரும் வந்த வேகத்தில் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்து சென்றனர்.

அதன் காரணமாக அந்த போட்டியில் இறுதி வரை மகேந்திர சிங் தோனி நிதானமாக நின்று விளையாடும் கட்டத்திற்கு தள்ளப்பட்டார். அவருடைய விக்கெட்டை வீழ்த்த அவருக்கு மேலும் நெருக்கடி கொடுக்கும் விதமாக ஸ்லிப், சில்லி பாய்ண்ட், ஷார்ட் ஸ்கொயர் என நான்கு வீரர்கள் அவரை சுற்றிவளைத்து ஃபீல்டிங் செய்தனர். இருப்பினும் அந்தப் போட்டியில் எம்எஸ் தோனி இறுதி வரை ஆட்டமிழக்காமல் 22 பந்துகளில் 8 ரன்கள் குவித்தார். எம்எஸ் தோனி போன்ற ஒரு அதிரடி வீரருக்கு அவ்வாறு ஃபீல்டு செட் செய்த அந்த புகைப்படம் அப்போது மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது.

அன்று எம்எஸ் தோனிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் ஃபீல்டு செய்த புகைப்படத்தை இன்று ஆஸ்திரேலிய அணி வீரர்கள் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஃபீல்டு செய்த புகைப் படத்துடன் இணைத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளது. மேலும் அந்த பதிவில், “இன்று நடந்த இந்த நிகழ்வு 2016ஆம் ஆண்டு டி20 போட்டியில் நடந்த ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக் நிகழ்வை(தோனிக்கு எதிராக அமைத்த ஃபீல்டு செட் அப்பை) நினைவு கூர்ந்து உள்ளது” என்று சற்று நக்கலாகவே குறிப்பிட்டு கூறியுள்ளது.

- Advertisement -

ரவிந்திர ஜடேஜா கொடுத்த சரியான பதிலடி

அந்த பதிவுக்கு கீழ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆஸ்தான வீரரும், இந்திய கிரிக்கெட் வீரருமான ரவிந்திர ஜடேஜா தக்க பதிலடி கொடுக்கும் வகையில் ஒரு கமெண்டு செய்துள்ளார்.

“இது மாஸ்டர் ஸ்ட்ரோக் அல்ல இது வெறும் ஷோ ஆஃப் ( கவனத்தை ஈர்ப்பதற்காக வேண்டுமென்றே நடத்தப்படுவது போல்) தான்”, என்று அதிரடியாக கமெண்ட் செய்துள்ளார்.

ரவீந்திர ஜடேஜா மட்டுமின்றி பல்வேறு மகேந்திர சிங் தோனியின் ரசிகர்கள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பதிவிட்ட அந்த பதிவுக்கு கீழ் தங்களுடைய கண்டனங்களை வெளிப்படுத்தி வந்த வண்ணம் இருந்து கொண்டிருக்கின்றனர்.