நானும் சென்னை அணிக்கு விளையாடியவன் தான் – டிவிட்டரில் இளம் ரசிகரை வாயடைக்க வைத்த முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்

0
442
Andrew Flintoff Savage Reply in Twitter

ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் முக்கியமான அணியுடன் ஒன்று சென்னை சூப்பர் கிங்ஸ். பல சிறந்த வெளிநாட்டு வீரர்கள் இந்த அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடி உள்ளனர். அதிலும் குறிப்பாக ஆல்ரவுண்டர்கள் சென்னை அணியில் அதிக அளவில் இடம் பிடிப்பர். ஸ்டைரீஸ், ஓரம், பிராவோ, கெம்ப் போன்ற பல வெளிநாட்டு ஆல்ரவுண்டர்கள் சென்னை அணிக்கு விளையாடியுள்ளனர். அப்படி கடந்த 2009ஆம் ஆண்டு நடந்த தொடரில் சென்னை அணிக்கு விளையாடியவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் ஆண்ட்ரூ பிளிண்டாஃப்.

இங்கிலாந்தின் லங்காஷயர் மகாணத்தில் பிறந்த இவர் இங்கிலாந்து அணிக்காக 79 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 144 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் அவர் ஏழு டி20 போட்டிகளிலும் இங்கிலாந்து அணிக்காக விளையாடியுள்ளார். மேலும் ஒரு முறை இந்தியாவில் ஒருநாள் தொடர் நடந்தபோது இவர் தனது சட்டையை கழட்டி சுற்றி இங்கிலாந்து அணியின் வெற்றியை கொண்டாடினார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தான் லார்ட்ஸ் மைதானத்தில் கங்குலி தனது சட்டையை கழற்றி வெற்றி பெற்றதும் சுற்றினார். இதே பிளிண்டாஃப் தான் டி20 உலக கோப்பையில் கடந்த 2007ஆம் ஆண்டு யுவராஜ் சிங்கை கோபமூட்டி 6 சிக்சர்கள் அடிக்க வைத்தார். கடந்த 2009 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர் இவர்தான். ஆனால் இவர் மூன்று ஆட்டங்களில் சென்னை அணிக்காக அறுபத்தி இரண்டு ரன்களும் இரண்டு விக்கெட்டுகளையும் மட்டுமே எடுத்துக் கொடுத்தார்.

- Advertisement -

தற்போது சில நாட்களுக்கு முன்பு கிரிக்கெட் குறித்து பெரிதும் தெரியாத இளைஞர் ஒருவர் பிளிண்டாஃபிடம் அவருக்குப் பிடித்த ஐபிஎல் அணி எது என்று கேள்வி கேட்டபோது பிளிண்டாஃப் சென்னை சூப்பர் கிங்ஸ் என்று கூறினார். மேலும் அவர் தான் 2009 ஆம் ஆண்டு சென்னை அணிக்காக விளையாடி உள்ளதாகவும் கூறினார். பெரிதாக கிரிக்கெட் குறித்த ஞானம் இல்லாத அந்த இளம் ரசிகர் பிளிண்டாஃப் கூறியதைக் கேட்டு சிறிது நேரம் வாயடைத்துப் போய்விட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் பகிரப்பட்டு வருகிறது.