“நேத்து போட்டியில நீங்க முக்கியமா பாராட்ட வேண்டியது ரோகித் கோலி இல்ல.. இவரைதான்!” – கம்பீர் அதிரடியான கருத்து!

0
3575
Gambhir

நேற்று இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக விளையாடிய கொல்கத்தா ஈடன் கார்டன் ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு மிகவும் வித்தியாசமான சவாலை கொண்டிருந்தது.

இந்த ஆடுகளத்தில் முதலில் புதிய பந்தில் பவர் பிளேவில் விளையாடுவதற்கு கொஞ்சம் எளிதாக இருந்தது. ஆனால் பந்து பழையதாகி சுழற் பந்துவீச்சு வந்ததும் எதிர்கொள்வது கடினமாகியது.

- Advertisement -

அதே சமயத்தில் பந்து இன்னும் நன்றாக தேய வேகப்பந்துவீச்சை விளையாடவும் கடினமாகவே இருந்தது. காரணம் ஆடுகளத்தில் பந்து மெதுவாக வந்தது. இதன் காரணமாக பேட்ஸ்மேன்களால் சரியாக டைம் செய்ய முடியவில்லை.

இந்த நிலையில் இதை உணர்ந்து இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் மிக பொறுப்புடன் விளையாடினார்கள். ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் நேரம் எடுத்துக் கொண்டாலும் பின்பு அதிரடியாக விளையாடினார்.

இறுதியாக ஸ்ரேயாஸ் ஐயர் 87 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இவர் இந்த அளவிற்கு நடுவில் கொஞ்சம் அதிரடியாக விளையாடிய காரணத்தினால் விராட் கோலி இறுதிவரை நின்று விளையாடி அணியை நல்ல ஸ்கோர்க்கு கூட்டிச் செல்ல முடிந்தது.

- Advertisement -

இதுகுறித்து பேசி உள்ள கம்பீர் கூறும் பொழுது ” ஸ்ரேயா ஐயரும் விராட் கோலி நேற்று வேற்று ஒரு கிரகத்தில் பேட்டிங் செய்தது போல இருந்தது. இது மும்பை மற்றும் டெல்லி போல மிக எளிதான ஆடுகளமாக இல்லை. தொடக்கத்தில் எளிதாக இருந்தாலும் கூட நடுவிலும் இறுதியிலும் கடினமாக இருந்தது. எனவே இந்த ஜோடியை ரோகித் மற்றும் கில் ஜோடியை விட அதிகம் பாராட்ட வேண்டும்.

இந்த ஆடுகளத்தில் சுழற்பந்துவீச்சை விளையாடுவது கடினமாக இருந்தது. கேசவ் மகாராஜ் 30 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்திருக்கலாம். ஆனால் அவருக்கு இந்திய பேட்ஸ்மேன்கள் ஒரு விக்கெட்டை மட்டுமே கொடுத்தார்கள். அதுதான் மிகவும் முக்கியமானது. இதன் காரணமாக தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சுமை அதிகரித்தது.

நான் ஸ்ரேயாஸ் ஐயரை முக்கியமாக பாராட்டுவேன். காரணம் விராட் கோலியின் மேலிருந்து அழுத்தத்தை யாராவது நீக்கி இருக்கிறார்கள் என்றால் அது ஸ்ரேயாஸ் ஐயர்தான். அவரால்தான் விராட் கோலிக்கு நீண்ட இன்னிங்ஸ் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.

அந்தக் கட்டத்தில் ஸ்ரேயாஸ் நிறைய டாட் பந்துகளை விளையாடி இருந்தால் கூட, சம்சி மற்றும் யான்சன் பந்துவீச்சில் சில முக்கியமான பெரிய ஷாட்கள் விளையாடாமல் இருந்திருந்தால், விராட் மீது அழுத்தம் உருவாகி இருக்கும். ஆனால் அப்படி இல்லாமல் ஸ்ரேயாஸ் பார்த்துக் கொண்டார்!” என்று கூறியிருக்கிறார்!