“இந்தியா ஈஸியா ஜெயிக்க காரணம் கோலியோ மத்தவங்களோ இல்ல.. இவர்தான் காரணம்!” – சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பரபரப்பு பேச்சு!

0
6431
Virat

எப்பொழுதும் இல்லாத அளவுக்கு இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையில் இந்த முறை மிகவும் வலிமையான அணியாக தெரிகிறது.

2003 ஆம் ஆண்டு இறுதிப் போட்டிக்கு கங்குலி தலைமையில் சென்ற உலகக் கோப்பை இந்திய அணியை விட, 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியை விட, தற்போதைய அணி மூன்று துறைகளிலும் பலமானதாக இருக்கிறது.

- Advertisement -

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடியிருக்கிறது. இந்த ஐந்து போட்டிகளிலும் தொடர்ச்சியாக இந்திய அணி வெற்றி பெற்று இருக்கிறது.

2019 ஆம் ஆண்டு தற்போதைய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா உலக கோப்பையில் ஐந்து சதங்கள் அடித்து இருந்தார். அப்பொழுது கொஞ்சம் மெதுவாக தொடங்கி பின்பு அதிரடியாக மாறி சதங்களை வரிசையாக கொண்டு வந்தார்.

ஆனால் தற்பொழுது எடுத்ததும் அதிரடியான துவக்கத்தை தருவதற்கு அவர் மிக வேகமாக விளையாட்டை ஆரம்பிக்கிறார். இதன் காரணமாக அவர் இரண்டு முறை 40 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து விட்டார். ஆனால் அவர் அதிரடியாக கொடுக்கும் துவக்கம் அணிக்கு மிகப்பெரிய பலமாக அமைந்து விடுகிறது.

- Advertisement -

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மன்சரேக்கர் கூறும் பொழுது ” ரோகித் சர்மா கில் உடன் இணைந்து முதல் பத்து ஓவர்களுக்கு பேட்டிங் செய்யும்பொழுது, பின்பு எல்லாமே எளிதாகி விடுகிறது. முதல் 10 ஓவர்களில் 70 ரன்கள் கிடைக்கும் பொழுது ஆட்டம் அங்கு சுலபமாகிறது. டிரெண்ட் போல்ட் ஸ்விங் மற்றும் பெர்குசன், மேட் ஹென்றி ஆகிய அவரது பந்துவீச்சு நமக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று நம்பப்பட்டது. ஆனால் ரோகித் சர்மா அதை மாற்றி விட்டார்.

இந்தியா தொடர்ச்சியாக வெற்றி பெற்றாலும் உறுதியாக வெற்றி பெறுவதால் இந்த ரோகித் சர்மாவை எனக்கு பிடிக்கிறது. அவர் 2019 ஆம் ஆண்டு 5 சதங்கள் உலக கோப்பையில் அடித்தார். ஆனால் அது இந்த அளவுக்கு நம்ப தகுந்ததாக இல்லை. தற்போது 40 ரன்களுக்குள் தான் எடுக்கிறார் ஆனால் நல்ல ரிதத்தை செட் பண்ணி தருகிறார் என்று கூறியிருக்கிறார்!