சுப்மன் கில் அபாரமாக ஆடுகிறார்; ஆனால் அணியில் நான் முழுமையாக நம்புவது இவர் ஒருவரை தான் – ஹர்திக் பாண்டியா பேட்டி!

0
30822

சுப்மன் கில் அடுத்த சூப்பர் ஸ்டாராக வருவார். அணி கடினமான சூழலில் இருக்கும்பொழுது, நான் இன்னொரு வீரரை தான் முழுமையாக நம்புவேன் என போட்டி முடிந்தபின் பேட்டியளித்தார் ஹர்திக் பாண்டியா!.

அகமதாபாத்தில் இரண்டாவது குவாலிஃபயர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் இரு அணிகளும் மோதின. குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பேட்டிங் இறங்கியது. சுப்மன் கில்(129) தனது பார்மை இங்கேயும் தொடர்ந்தார். மீண்டும் ஒருமுறை சதம் அடித்துக்கொடுக்க, 20 ஓவர்களில் 233 ரன்கள் குவித்தது.

- Advertisement -

இமாலய இலக்கை துரத்திய மும்பை அணிக்கு பார்மில் இருந்த சூரியகுமார் யாதவ்(61) நம்பிக்கை அளிக்கும் விதமாக விளையாடிக் கொடுத்தார். ஆனால் அவரால் கடைசி வரை எடுத்துச்செல்ல முடியவில்லை.

மிடில் ஆர்டரில் கிரீன்(30) மற்றும் திலக் வர்மா(43) ஆகியோர் கிடைத்த துவக்கத்தை பெரிய ஸ்கோராக எடுத்துச்செல்ல முடியவில்லை. இதனால் பார்ட்னர்ஷிப் கிடைக்காமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து, 18.2 ஓவர்களில் 171 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

மும்பை இந்தியன்ஸ் அணியை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பைனலுக்குள் சென்றது குஜராத் டைட்டன்ஸ் அணி. போட்டியை அபாரமாக வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா. போட்டி முடிந்த பிறகு பேட்டியளியளித்ததாவது:

- Advertisement -

“தொடர் முழுவதும் வீரர்கள் கடுமையான உழைத்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. தொடர்ந்து பயிற்சி செய்துகொண்டே இருக்கிறார்கள். அது போட்டியில் வெளிப்படுகிறது. வீரர்கள் மத்தியில் தெளிவு மற்றும் நம்பிக்கை நன்றாகவே தெரிகிறது.

கில் ஆடிய ஆட்டத்தில் மிகவும் நேர்த்தியான ஆட்டம் இது. இன்றைய ஆட்டத்தில் அவருக்கு பந்துவீசுவதும், அவர் அதை அடிப்பதுமாக இருந்தது ஆட்டம். அடுத்த சில வருடங்களில் குஜராத் அணிக்கும் இந்திய அணிக்கும் மிகப்பெரிய சூப்பர் ஸ்டாராக வருவார்.

ரஷித் கான் பற்றி ஏற்கனவே நிறைய பேசிவிட்டோம். அணி கடினமான சூழலில் இருக்கும்பொழுது, அவர் ஒருவரை தான் நான் மிகவும் நம்புகிறேன். அவரும் பலமுறை என் நம்பிக்கையை காப்பாற்றியுள்ளார்.

இன்று சிறந்த கிரிக்கெட்டை வெளிப்படுத்தினோம். போட்டியில் 100 சதவீதம் கொடுத்தோம். இதன் வெளிப்பாடாகவே எங்களுக்கு சாதகமான முடிவு வந்திருக்கிறது. நாக்-அவுட் போட்டி எப்படி வேண்டுமானாலும் மாறியிருக்கலாம். இப்போது பைனலுக்கு தகுதி பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.” என்றார்.