பிட்ச் மோசமா இருக்குன்னு விமானத்தில் இருந்தே கண்டுபிடிச்சிட்டாங்க போல! – ஜடேஜா ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி!

0
916
Jadeja

ஆஸ்திரேலியார்களின் பல சர்ச்சையான கருத்துக்களுக்குப் பிறகு அதை முறியடிக்கும் விதமாக மிகச் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணி பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்ட் போட்டியை நாக்பூரில் வைத்து இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது!

இந்த டெஸ்ட் போட்டியில் பேட்டிங் பௌலிங் என இரு துறைகளிலும் உலகத்தின் நம்பர் ஒன் ஆல்ரவுண்டரான இந்திய வீரர் ஜடேஜாவின் இந்திய அணிக்கான பங்களிப்பு மிகப்பெரியதாக இருந்தது. ஆட்டநாயகன் விருதும் அவருக்கே கிடைத்தது!

- Advertisement -

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணியை தனது அபாரமான சுழற்பந்து வீச்சால் நிலைகுலைய செய்தார் ரவீந்திர ஜடேஜா. மொத்தம் 22 ஓவர்கள் வீசி எட்டு மெய்டன்கள் செய்து 47 ரன்கள் விட்டுக் கொடுத்து ஐந்து விக்கட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

அடுத்து பேட்டிங்கில் நெருக்கடியான நேரத்தில் 185 பந்துகளைச் சந்தித்து ஒன்பது பவுண்டரிகளுடன் 70 ரன்கள் எடுத்து இந்திய அணி நல்லதொரு நிலையை எட்ட உதவி செய்தார். அடுத்து ஆஸ்திரேலிய இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீசி இரண்டு விக்கட்டுகளையும் வீழ்த்தினார். மொத்தம் ஏழு விக்கட்டுகள் 70 ரன்கள் என்று அமர்க்களப்படுத்தினார்!

ஆஸ்திரேலியார்களின் ஆடுகளம் பற்றியான குற்றச்சாட்டு குறித்து இன்று பேசிய அவர் ” ஆடுகளம் மோசமாக இருக்கிறது என்று விமானத்தில் இருந்தபடியே கண்டுபிடித்து விட்டார்கள் போல. நாக்பூரில் பந்து அதிகம் திரும்பும் என்று பிம்பம் கட்டமைக்கப்பட்டது. ஆனால் ஆஸ்திரேலியா, இந்திய வீரர்கள் அதிகம் ஆட்டம் இழந்தது நேரான பந்தில்தான். சுழற் பந்துவீச்சு இந்திய அணிக்கு பல நேரங்களில் ஆட்டத்தை வெல்ல உதவி உள்ளது. இப்படி இருக்க இந்தியாவுக்கு சாதகமான வகையில் ஆடுகளத்தை அமைப்பதில் எந்த தவறும் முதலில் கிடையாது” என்று கூறி இருக்கிறார்!

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
“ஆஸ்திரேலியாவில் நாங்கள் விளையாட போகும்பொழுது, அவர்கள் ஆடுகளத்தில் 10 முதல் 12 மில்லி மீட்டர் வரை புற்களை வளர விட்டு விடுவார்கள். அப்போது ஆடுகளம் குறித்து நாங்கள் எதுவும் பேசுவதில்லை. அதேபோல் அவர்கள் இந்தியா வரும்பொழுது எதுவும் பேசக்கூடாது!” என்று திட்டவட்டமாக பேசியிருக்கிறார்!