“10 வருஷமா இப்படித்தான்.. எங்களுக்கு பெருமைதான்” – ரவிச்சந்திரன் அஷ்வின் பேட்டி

0
963
Ashwin

இந்திய அணி இதுவரையில் 31 ஆண்டுகளாக தென் ஆப்பிரிக்க நாட்டுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்து வருகிறது.

இதில் ஒரு முறை கூட அந்த நாட்டில் வைத்து டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றது கிடையாது. மிகச் சிறந்த அணி கிடைத்த போதிலும் கூட தென் ஆப்பிரிக்க சூழலில் டெஸ்ட் தொடரை வெல்ல முடியாதது இந்திய கிரிக்கெட்டுக்கு சோகமான ஒரு வரலாறாகவே தொடர்ந்தது.

- Advertisement -

இந்த நிலையில் இந்த முறை நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரை எப்படியும் இந்திய அணி வென்று விடும் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. கடந்த முறையை விட தென்னாபிரிக்க அணி மிகவும் பலவீனமாக காணப்பட்டது.

ஆனாலும் கூட இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் சரியான ஆடுகளத்தில் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து அதிர்ச்சி கொடுத்தது. இதுவரையில் சுமுகமாகவே இந்திய கிரிக்கெட் சுற்றுப்பயணம் அமைந்திருந்தது.

இதற்குப் பிறகு முதல் டெஸ்ட் போட்டியை வென்ற காரணத்தினால், இரண்டாவது டெஸ்ட் போட்டியை வேகப்பந்துவீச்சு பலத்தை வைத்து வென்று, தொடரைக் கைப்பற்ற முடிவு செய்த தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் நிர்வாகம் அமைத்த ஆடுகளம் மிக மோசமானதாக அமைந்திருந்தது. கடைசியாக அவர்கள் விரித்த வலையில் அவர்களே விழுந்து தோற்று விட்டார்கள்.

- Advertisement -

மொத்தம் 107 ஓவர்கள் 642 பந்துகள் மட்டுமே வீசப்பட்டன. மிகக் குறைந்த பந்துகள் வீசி முடிக்கப்பட்ட டெஸ்ட் போட்டியாக இந்த போட்டி கிரிக்கெட் வரலாற்றில் பதிவானது. முதல் நாளிலேயே 23 விக்கெட்டுகள் விழுந்தது. முதல் நாள் ஆடுகளத்தில் இருந்த விரிசல்களில் பந்து படும்பொழுது, உயிருக்கு ஆபத்தான முறையில் பவுன்ஸ் ஆனது.

இதுகுறித்து இந்திய அணிவுடன் இணைந்திருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறும்பொழுது ” கடந்த 10 ஆண்டுகளாக எங்களுக்கு வெளிநாடுகளில் இப்படித்தான் நடக்கிறது. நான் இதை பெருமையாகவே சொல்கிறேன், நாங்கள் இதைத் தாண்டிதான் விளையாடி வெற்றி பெறுகிறோம். இப்படியான ஆடுகளங்களை பார்த்தால் நாங்கள் பின்வாங்குவது கிடையாது. விளையாடி வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் நாங்கள் மாறுவதே இல்லை.

ஆனால் இதே போன்ற ஒரு ஆடுகளம் இந்தியாவில் நாக்பூர் இல்லை அகமதாபாத்தில் கொடுக்கப்பட்டிருந்தால் என்ன சொல்வார்கள்? எனக்கு இம்மாதிரியான இரட்டை நிலைப்பாடுகள்தான் பிடிப்பது கிடையாது.

இதுமட்டும் இல்லாமல் இப்படி அமைக்கப்படக்கூடிய ஆடுகளங்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு இருக்கின்றன. மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்திற்கு ஒத்துழைக்கும் இம்மாதிரியான ஆடுகளங்களில், பந்து எதிர்பார்க்காத அளவு பவுன்ஸ் ஆகும் பொழுது, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தவும் செய்யலாம். ஆனால் இந்திய ஆடுகளங்கள் இப்படியானது கிடையாது. அங்கு பந்து திரும்ப மட்டுமே செய்யும். நீங்கள் வேகமாக பந்தை வீசி கூட திருப்பலாம். அதனால் எதுவும் ஆகாது!” என்று கூறி இருக்கிறார்!