“இந்த இந்தியப் பையனுக்கு பந்து வீசுவது சச்சினுக்கு வீசுவது போல கஷ்டம்” வாசிம் அக்ரம் பிரமிப்பு!

0
2754
Akram

இந்திய கிரிக்கெட்டில் பழைய வீரர்கள் வெளியேறி புதிய வீரர்கள் வருவதற்கான காலக்கட்டம் நிலவிக் கொண்டிருக்கிறது.

ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல் ஆகிய மூத்த வீரர்களை இப்பொழுதே இந்திய கிரிக்கெட் நிர்வாகம் டி20 இந்திய அணியில் இருந்து விலக்கி வைத்திருக்கிறது.

- Advertisement -

இந்த வகையில் தற்பொழுது இளம் வீரரான சுப்மன் கில் எதிர்கால இந்திய கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டாராக வருவதற்கான தகுதிகளோடு காணப்படுகிறார்.

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் 17 போட்டிகளில் மூன்று மதங்களுடன் 890 ரன்கள் குவித்திருந்தார். ஒருநாள் கிரிக்கெட்டில் 1300க்கும் மேலான ரன்களை 65 சராசரியில் குவித்திருக்கிறார்.

இவரைப் பற்றி லெஜன்ட் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் வாசிம் அக்ரம் கூறும் பொழுது ” நான் ஒரு பந்துவீச்சாளராக டி20 கிரிக்கெட்டில் சுப்மன் கில்லுக்கு பந்த வீசுகிறேன் என்றால், அது ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் 10 அல்லது 15 ஓவருகளுக்கு சச்சினுக்குப் பந்து வீசுவதை போன்றது.

- Advertisement -

நான் ஜெயசூர்யா மற்றும் கலுவிதரனா ஆகியோருக்கு பந்து வீசினால் அவர்கள் ஒவ்வொரு பந்தையும் அடிக்க முயற்சி செய்வதால் எனக்கு விக்கெட் வாய்ப்பு உண்டு. ஆனால் சச்சின் மற்றும் கில் இடம் எனக்கு அந்த வாய்ப்பு கிடையாது. ஏனென்றால் இவர்கள் சரியான கிரிக்கெட் ஷாட் விளையாடக் கூடியவர்கள்.

கில் உடைய பேட்டிங் அடிப்படைகள் மிகவும் சரியானவை. இவருடைய திறமையை உணராமல், இவர் பிரான்சிசைஸ் கிரிக்கெட் அணிக்கு மட்டும் அல்லாமல் இந்திய கிரிக்கெட் அணிக்கும் கேப்டனாக கூடியவர் என்பதை உணராமல் எப்படி கொல்கத்தா இவரை ரிலீஸ் செய்தது என்று தெரியவில்லை.

கில் வெறும் போட்டிகளை வெல்லக்கூடிய சாதாரண வீரர் கிடையாது. அவர் பெரிய தொடர்களை வெல்லக்கூடிய பெரிய பேட்ஸ்மேன்!” என்று கூறியிருக்கிறார்!