விராட் கோலி நியாயமா தான் கேட்டாரு, அதுல தப்பிலேயே – பாகிஸ்தான முன்னாள் கேப்டன் கோலிக்கு ஆதரவு!

0
3361

விராட் கோலி நோபால் மற்றும் வீடு கேட்டது சரிதான் என்று அவர் ஆதரவாக பேசியுள்ளார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம்.

இந்திய அணி விளையாடும் போட்டிகளில் தொடர்ந்து ஐசிசி விதிமுறை மீறப்படுகிறது என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்த வண்ணம் இருக்கின்றன

- Advertisement -

டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் சூப்பர் 12 போட்டியை பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடியது. இதில் கடைசி ஓவரில் இடுப்புக்கு மேலே பந்து வீசப்பட்டதால் நோ-பால் என கொடுக்கப்பட்டது.

இடுப்பிற்கு சற்று ஏறக்குறைய இருந்ததால் இதை அம்பையர் நினைத்திருந்தால் சரியான பந்து என்றும் கூறியிருக்கலாம். அந்த வகையில் தான் இருந்தது என்று பாகிஸ்தான் தரப்பிலிருந்து கூறப்பட்டது. வேண்டுமென்று இந்திய அணிக்கு சாதகமாக கொடுத்திருக்கின்றனர் என்றும் அவர்கள் தரப்பிலிருந்து குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

அடுத்ததாக 16 வது ஓவரின் போது ஒரு பவுன்ஸ் வீசப்பட்டு விட்டது. இரண்டாவது வீசப்பட்ட பந்து அவ்வளவு மேலே ஒன்றும் செல்லவில்லை. கழுத்து உயரத்தில் தான் சென்றது. ஆனால் அதற்கு விராட் கோலி வைட் கேட்டார். உடனடியாக எந்த ஒரு சந்தேகமும் இன்றி நடுவர் வைட் கொடுத்து விட்டார்.

- Advertisement -

விராட் கோலி கேட்டது மிகவும் சரியான ஒன்றுதான் அதில் எந்த தவறும் இல்லை என்று சாதகமாக பேசி உள்ளார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம். அவர் கூறுகையில், “விராட் கோலி பாகிஸ்தானுக்கு எதிராக நோ-பால் கேட்டதும் வங்கதேச அணிக்கு எதிராக ஒயிட் கேட்டதும் எனக்கு சரியாகத்தான் படுகிறது.

பேட்ஸ்மேனுக்கு பந்து எந்த பகுதியில் வருகிறது? அது எவ்வளவு உயரத்தில் இருக்கிறது? என்பது தெளிவாக உணர முடியும். அந்த வகையில் அவர் அம்பையரிடம் முறையிட்டு இருக்கிறார். அது சரி அல்லது தவறு என்கிற அடிப்படையில் நடுவர் முடிவு செய்வார்.

விராட் கோலி விஷயத்தில் நடுவர் இந்தியாவிற்கு சாதகமாக பேசினார் என்பதற்காக ஒட்டுமொத்தமாக அவர் இந்தியாவிற்கு சாதகமானவர் என்று கூறுவது ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. குற்றம் சாட்டுபவர்கள் இதனை புரிந்து கொண்டு விமர்சனங்களை முன் வைக்க வேண்டும்.” என்று விராட் கோலிக்கு ஆதரவாக பேசினார்.