“விராட் கோலி கேப்டனாக இல்லாமல்; ரோகித் தலைமையில் வீரர்கள் செயலற்றவர்களாக இருக்கிறார்கள்” – பிரபல பாலிவுட் நடிகர் பரபரப்பு பேச்சு!

0
525
Viratkohli

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்து லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது!

இறுதிப் போட்டியின் நேற்றைய முதல் நாளில் இந்தியாவுக்குச் சாதகமாக அமைந்தது டாசை வென்றது மட்டும்தான். அதற்குப் பிறகு டாசை வென்று பந்து வீசிய பொழுது எதுவுமே சரியாக அமையவில்லை.

- Advertisement -

ஆஸ்திரேலியா அணியை 76 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகள் சரித்த பிறகு மேற்கொண்டு இந்திய அணியின் பந்துவீச்சாளர்களால் எதையுமே செய்ய முடியவில்லை. ஹெட் மற்றும் ஸ்மித் மிகச் சிறப்பாக விளையாடி ஆட்டத்தைப் பறித்து விட்டார்கள்.

அதே சமயத்தில் இந்திய வேகப்பந்துவீச்சாளர்களின் லைன் மற்றும் லென்த் சூழ்நிலைக்கு தகுந்தவாறு இல்லாமல் மிகவும் மோசமாக இருந்தது. இதனால் 10 பந்துகளுக்கு ஒருமுறை ஆஸ்திரேலியா பவுண்டரி அடித்தது.

மேலும் இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவின் கள வியூகங்கள் மிகவும் சுமாராக இருந்தது என்ற குற்றச்சாட்டும் பரவலாக கூறப்பட்டு வருகிறது. மேலும் அஸ்வினை அணியில் எடுக்காதது மிகப்பெரிய விமர்சனத்தை உருவாக்கி இருக்கிறது.

- Advertisement -

நேற்றைய போட்டியில் ரோகித் சர்மா டிராவீஸ் ஹெட்டுக்கு ஷார்ட் பந்தில் பலவீனம் இருந்தும் அதை ஆரம்பம் முதலே அவருக்கு எதிராக பயன்படுத்தாமல் இருந்து இறுதி நேரத்தில் மட்டும் பயன்படுத்தியது விவாதம் ஆகி இருக்கிறது. ஆட்டம் ஆஸ்திரேலியா பக்கம் போகப்போக இந்திய வீரர்கள் பக்கம் எந்தவித அசைவும் இல்லாமல் இருந்ததும் பிரச்சனையாகி இருக்கிறது.

தற்பொழுது இதுகுறித்து பாலிவுட் திரை உலகின் முக்கியமான குடும்பமான கபூர் குடும்பத்திலிருந்து அனில் கபூரின் மகனும் நடிகரும் மற்றும் தயாரிப்பாளருமான ஹரிஷ் வர்தான் கபூர் காட்டமான ட்வீட் ஒன்றை பதிவு செய்திருக்கிறார்.

அதில் “விராட் கோலி இல்லாதது பயங்கரமான சோகம். அவர் இல்லாமல் வீரர்களிடையே தீவிரமான உணர்வும் வெற்றிக்கான பசியும் இல்லை. அணி வீரர்கள் ரோகித் சர்மா தலைமையில் கிடைக்கும் வாய்ப்புகளை எளிதாகச் கடந்து சென்று செயல் அற்றவர்களாக இருக்கிறார்கள். அஸ்வினை அணியில் எடுக்காமல் அணித்தேர்வும் மோசமாக இருக்கிறது. பும்ரா இல்லாததும் பெரிய பின்னடைவு!” என்று கூறியிருக்கிறார்!