தோனிக்கு கொடுத்தது தப்பு.. 2011 WC உண்மையான ஆட்டநாயகன் ஜாகிர் கான்.. கம்பீர் பேட்டி.!

0
558

இந்தியாவில் தற்போது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டிகளில் இதுவரை 13 ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடம் வகித்து வருகிறது. சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தியது இந்தியா.

இந்நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் போது மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி 28 ஆண்டுகளுக்குப் பிறகு உலக கோப்பையை மீண்டும் கைப்பற்றியது. இலங்கை அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் மகேந்திர சிங் தோனி மற்றும் கௌதம் கம்பீர் ஆகியோர் மிகச் சிறப்பாக விளையாடி இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

- Advertisement -

அந்தப் போட்டியில் இந்திய அணி சச்சின் டெண்டுல்கர் மற்றும் விரேந்திர சேவாக் ஆகியோரின் விக்கெட்டை விரைவிலேயே இழந்தது. இதனைத் தொடர்ந்து கௌதம் கம்பீர் விராட் கோலி உடன் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டார். பின்னர் விராட் கோலி ஆட்டம் இழந்த உடன் மகேந்திர சிங் தோனி ஐந்தாவது இடத்தில் களம் இறங்கி கம்பீருடன் இணைந்து இந்தியாவை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

இந்தப் போட்டியில் கௌதம் கம்பீர் 97 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி 91 ரன்கள் உடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆட்டநாயகனாக எம்எஸ் தோனி தேர்வு செய்யப்பட்டார். ஆனால் கௌதம் கம்பீர் ரசிகர்கள் அவருக்கு தான் ஆட்டநாயகன் விருது வழங்கி இருக்க வேண்டும் என தற்போது வரை பேசி வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து பேசி இருக்கும் கௌதம் கம்பீர் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜாகிர் கான் அந்தப் போட்டியின் உண்மையான ஆட்டநாயகன் என தெரிவித்திருக்கிறார். அவரது சிறப்பான பந்துவீச்சின் மூலமாகத்தான் இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்தது. அதனால் ஆட்ட நாயகன் விருது என்னையும் தோனியையும் விட ஜாகீர் கானுக்கு வழங்கப்பட்டிருந்தால் சிறப்பானதாக அமைந்திருக்கும் என தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

அந்தப் போட்டியில் ஜாகிர் கான் வீசிய முதல் 5 ஓவர்களில் 3 மெய்டன்கள் வீசி 6 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக பேசியிருக்கும் கம்பீர்” 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஜாகிர் கான் மிகச் சிறப்பாக பந்து வீசி இருந்தார். அவரது துவக்க பந்துவீச்சு மட்டும் சரியில்லாமல் அமைந்திருந்தால் இலங்கை அணி 350 ரன்கள் குவித்திருக்கும். ஜாகீர் கான் துவக்கத்தில் சிறப்பாக பந்து வீசி கட்டுப்படுத்தியது தான் இலங்கையை 300 ரன்களுக்குள் சொர்க்க முடிந்தது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பாக பேசிய அவர் அந்தப் போட்டியில் என்னையும் எம் எஸ் தோனியையும் பற்றி தான் மக்கள் அதிகமாக பேசுகிறார்கள். ஆனால் ஜாகிர் கானின் பங்கு மிக முக்கியமானது. அவர் துவக்கத்தில் வீசிய ஓவர்கள் தான் இந்திய அணியின் வெற்றிக்கு மிகவும் முக்கியமான காரணம் என தெரிவித்திருக்கிறார் . கடந்த 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட ஜாகீர் கான் 21 விக்கெட்டுகள் வீழ்த்தி அந்த உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் ஷாகித் அ அப்ரிதியுடன் இணைந்து முதலிடம் பிடித்தார் .