போவெல் நோ பால் விவாதத்தை கண்டு நான் ஹோட்டலில் இருந்த 4 ரிமோட்டுகளை உடைத்து விட்டேன் – ரிக்கி பாண்டிங் ஆவேசப் பேச்சு

0
268
Ricky Ponting about Powell No ball issue

கடந்த வெள்ளிக்கிழமை 22ஆம் தேதி இரவு டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டி நடைபெற்றது. அப்போட்டியில் ராஜஸ்தான் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் விளையாடிய ராஜஸ்தான் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 116 ரன்கள் குவித்தார்.

பின்னர் விளையாடிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் மட்டுமே குவித்தது. டெல்லி அணியில் அதிகபட்சமாக கேப்டன் ரிஷப் பண்ட் 44 ரன்கள் குவித்தார்.

- Advertisement -
டிவி ரிமோட்களை உடைத்து விட்டேன்

டெல்லி அணியில் விளையாடிய போட்டியில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் மைதானத்தில் இல்லை. தனியார் விடுதியில் அவர் தற்பொழுது தனிமைப் படுத்தப்பட்டுள்ளார். போட்டியை அங்கிருந்து தொலைக்காட்சியில் பார்த்த ரிக்கி பாண்டிங் அப்போட்டியை பார்த்த அனுபவத்தை பற்றி தற்போது நம்மிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.

“நான் ஹோட்டலில் இருந்து டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியை பார்த்தேன். மிகவும் வெறுப்பாக இருந்தது. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நான் 3-4 ரிமோட்களை உடைத்து சில தண்ணீர் பாட்டில்களையும் சுவரில் வீசினேன்” என்று சிறிய புன்னகையுடன் தற்பொழுது கூறியுள்ளார்.

கடைசி ஓவரில் நடந்த பரபரப்பு

போட்டியின் கடைசி ஓவரில் வீசப்பட்ட மூன்றாவது பந்து நோ பால் என கேப்டன் ரிஷப் பண்ட், ஷர்துல் தாகூர் மற்றும் துணை பயிற்சியாளர் பிரவீன் அம்ரே ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

- Advertisement -

அந்த ஓவரில் மூன்றாவது பந்தை ஃபுல் டாஸாக மெக்காய் வீசினார், அதை போவெல் எதிர்கொண்டார். மெக்காய் வீசிய பந்தை மறுஆய்வு செய்து பார்க்கையில் போவெலின் இடுப்பு பகுதிக்கு மேல் இருந்தது தெரியவந்தது. இடுப்பு பகுதிக்கு மேல் வீசப்படும் பந்து நோபால் என்று அறிவிக்கப்பட வேண்டும்.

ஆனால் போவெல் சற்று இறங்கி வந்து விளையாடிய காரணத்தினால் அந்த பந்து
ஃபுல் டாஸாக எடுத்துக் கொள்ளப்பட்டது, என்று கூறி நடுவர்கள் நோபால் கொடுக்க மறுத்துவிட்டனர். மேலும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மூவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. துணை பயிற்சியாளர் பிரவீன் அம்ரேவுக்கு ஒரு போட்டியில் விளையாட தடையும் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.