“அது ரோகித் சர்மாவை கிழித்து எறிந்தது” – ரோகித் சர்மாவுக்கு நடந்த ஒன்றைப்பற்றி தினேஷ் கார்த்திக் தெரிவிப்பு!

0
848
Dinesh karthick

இன்று இந்திய அணிக்கு மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளுக்கு கேப்டனாக உள்ள ரோகித் சர்மாவின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை முதல் ஆறு ஆண்டுகள் அடுத்து தற்போதைய உள்ள காலம் வரை இரண்டு பிரிவாகப் பிரிக்கலாம்!

ஏனென்றால் ரோகித் சர்மா முதல் 6 ஆண்டுகள் சன்னி நிரூபித்து இந்திய அணியில் ஒரு நிரந்தரமான இடத்தைப் பிடிப்பதற்கு மிகவும் போராடினார். அவரைப் பற்றிப் பேசக்கூடிய அனைவருமே அவர் மிகத் திறமையான பேட்ஸ்மேன் ஆனால் அவர் தொடர்ந்து சீராக விளையாடுவதில்லை இதுதான் பிரச்சனை என்று கூறி வந்தார்கள்.

- Advertisement -

அவர் இந்திய அணிக்காக துவக்க வீரராக வருவதற்கு முன்பு கீழே பல இடங்களில் விளையாடியிருக்கிறார். அதில் சில வெற்றிகள் வந்தாலும் அந்த வெற்றிகள் அவரை இந்திய அணியில் நிரந்தரமான வீரராக ஆக்குவதற்கு போதுமானதாக இல்லை என்றுதான் கூறவேண்டும்.

2017 ஆம் ஆண்டு மகேந்திர சிங் டோனி தான் இதற்கு ஒரு பெரிய கதவை திறந்து விட்டார் என்றே கூறலாம். அந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ரோகித் சர்மாவை துவக்க வீரராக களம் இறக்கினார். இது இந்திய கிரிக்கெட்டில் மிகப்பெரிய மாற்றங்களை அதற்குப் பிறகு கொண்டு வந்தது என்றே கூறலாம். ஒரு துவக்க வீரராக வெள்ளை பந்து கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவின் சாதனைகள் மிகப்பெரியது.

இப்படி தன்னை வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் நிரூபித்து இந்திய அணியில் நிரந்தர இடம்பிடித்துவிட்டார் ரோகித் சர்மாவால், இந்திய டெஸ்ட் அணியில் ஒரு இடத்தை பெறவே முடியவில்லை. சச்சினின் கடைசி டெஸ்ட் தொடரில் இரண்டு இன்னிங்சிலும் மிகப் பிரமாதமாக இரண்டு சதங்களை ரோகித் சர்மா அடித்து இருந்தபோதும் அவருக்கு மேலும் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

- Advertisement -

ஆனால் இந்தச் சூழ்நிலையை மாற்றியவர் இன்றைய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி. 2019ஆம் ஆண்டு இந்தியாவில் தொடர் விளையாட சவுத்ஆப்பிரிக்கா இங்கு வந்தது. அந்தத் தொடரில் ரோகித் சர்மாவை துவக்க வீரராக வலியுறுத்தி ரவி சாஸ்திரி தான் களமிறக்கினார். இதற்குப் பிறகு எல்லாமே மாறிவிட்டது. அந்தத் தொடரில் துவக்க வீரராக களமிறங்கிய ரோஹித் சர்மா இரட்டை சதத்தை விளாசினார். மேலும் 2021 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் முதல் வெளிநாட்டு டெஸ்ட் சதத்தை கொண்டுவந்தார்.

தற்போது ரோகித்சர்மா கிரிக்கெட் வாழ்க்கையில் நடந்த ஒரு முக்கியமான விஷயத்தை இந்திய அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் ” வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் ரோகித் சர்மா வெற்றி அடைந்து பல தூரம் முன்னேறி சென்று விட்டார். அதை அவர் மிகவும் மகிழ்ந்து விரும்பி செய்தார். ஆனால் 2018ஆம் ஆண்டு திடீர் என்று அவர் இந்திய டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் அங்கிருந்து வெள்ளைப் பந்து இந்திய அணிக்கு அனுப்பப்பட்டார். அது அவரை மிகவும் காயப்படுத்தியது. அப்படி நடக்கும் என்று ரோகித் சர்மா எதிர்பார்க்கவே இல்லை. அது உண்மையில் ரோகித் சர்மாவை கிழித்து எறிந்தது” என்று கூறியிருக்கிறார்!