“இந்தியா தோற்றதுதான் சரி.. ஜெயிச்சிருந்தாதான் அது மோசமானது!” – பாக் அப்துல் ரசாக் சர்ச்சை பேச்சு!

0
1257
Razzak

இந்தியாவில் நடந்து முடிந்த 13வது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் பல கோடி கணக்கான ரசிகர்களை சோகமாக்கும் வகையில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் இறுதி போட்டியில் தோல்வி அடைந்தது.

இறுதிப் போட்டிக்கு முன்பாக இந்திய அணி நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் தொடர்ச்சியாக 10 போட்டிகளை எதிரணிகளை ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றது.

- Advertisement -

எந்த இடத்திலும் இந்திய அணி தோல்வியின் பாதையின் இல்லாமல் வெற்றி பெற்று வந்த காரணத்தினால், இந்திய கிரிக்கெட் அணி ரசிகர்களும் இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர்களும் பெரிய நம்பிக்கையில் தைரியமாக இருந்தனர்.

ஆனால் இந்திய அணி இறுதி போட்டிகள் தோல்வி அடைந்தது எல்லோரது மனதையும் உடைக்கும் நிகழ்வாக அமைந்திருக்கிறது. இதன் காரணமாக இன்று துவங்கும் டி20 தொடரில் கூட இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரிதாக ஆர்வம் இல்லை.

அந்த இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு பத்து ஓவர்களில் 80 ரன்கள் கிடைக்கும் கூட, அந்த துவக்கத்தை மேற்கொண்டு பெரிதாக எடுத்துச் செல்வதற்கு இந்திய அணியால் முடியவில்லை. மேற்கொண்டு அங்கிருந்து 160 ரன்கள் மட்டுமே 40 ஓவர்களுக்கு எடுத்தது.

- Advertisement -

விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் இணைந்து விளையாடிய போதும்கூட அவர்களால் ரன் ரேட்டை உயர்த்த முடியவில்லை. ஆடுகளம் அவர்களை அதற்கு அனுமதிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

முதல் பாதையில் ஆடுகளத்தில் இரு வேறு வேகம் இருந்தது. மேலும் பந்து நன்றாக கிரிப் ஆகி சுழன்றது. இதன் காரணமாக பேட்ஸ்மேன்களால் பந்தை கணித்து விளையாடுவது பெரிய கடினமாக இருந்தது.

ஆனால் இரண்டாவது பகுதியில் ஆடுகளத்தில் பனி வர ஆரம்பித்ததும், வந்து மிக எளிதாக பேட்டுக்கு வர ஆரம்பித்து விட்டது. இதனால் ஆரம்பிக்கட்டுகளை தவிர ஆஸ்திரேலிய அணிக்கு எந்தவிதமான நெருக்கடியையும் இந்திய பந்துவீச்சாளர்களால் தர முடியவில்லை.

தற்பொழுது இது குறித்து பேசி உள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் அப்துல் ரசாக் கூறும் பொழுது “கிரிக்கெட் வென்றது இந்தியா தோற்றது. இந்தியா வென்று இருந்தால் அது விளையாட்டுக்கு மிகவும் சோகமான தருணமாக இருந்திருக்கும். அவர்கள் நிலைமைகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்கள். இதற்கு முன்பு எந்த ஐசிசி இறுதிப் போட்டிகளும் இப்படியான ஆடுகளத்தை நான் பார்த்ததில்லை. இந்தியா தோற்றது மிகவும் சிறப்பானது!” என்று கூறியிருக்கிறார்!