சிஎஸ்கே-க்கு ரெண்டு மேட்ச்தான் ஆடினது வருத்தம்தான் ; ஆனா அதுல ஒரு நல்ல விஷயம் நடந்துச்சு – பென் ஸ்டோக்ஸ் பரபரப்பான பேச்சு!

0
9790
Stokes

இன்றைய கிரிக்கெட் உலகில் சர்வதேச கிரிக்கெட் சிறந்த ஆல் ரவுண்டர்களில் இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டாக்ஸ்க்கு முக்கிய இடம் இருக்கிறது!

தற்பொழுது இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வரும் பென் ஸ்டோக்ஸ் பணிச்சுமை அதிகமாக இருக்கின்ற காரணத்தால் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

- Advertisement -

இதையடுத்து கடந்த வருடம் மெகா ஏலத்திற்கு வராத பென் ஸ்டோக்ஸ் இந்த முறை மினி ஏலத்திற்கு வந்தார். இவரை சிஎஸ்கே அணி 16.25 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது.

இதற்கு முன்னால் ரைசிங் புனே ஜெயின்ட்ஸ் அணிக்கும், 2018 முதல் 2021 வரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12.50 கோடிக்கு விளையாடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த வருடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வந்த பென் ஸ்டோக்ஸ் முதல் இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடினார். இந்த இரண்டு போட்டிகளில் 15 ரன்கள் எடுத்த அவர், ஒரு ஓவர் மட்டும் பந்து வீசி 18 ரன்கள் விட்டுக் கொடுத்திருந்தார்.

- Advertisement -

நடுவில் காலில் சிறிய காயம் ஏற்பட சில போட்டிகளில் இருந்து விலகி இருந்தார். இந்தக் காலகட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒரு சரியான பிளேயிங் லெவனை மகேந்திர சிங் தோனி கண்டுபிடிக்க, அதையடுத்து இவருக்கு விளையாட வாய்ப்பு தரவில்லை. மேலும் இவர் பிளே ஆப் போட்டிகள் நடக்கும் காலத்திலேயே இங்கிலாந்துக்குக் கிளம்பி சென்று விட்டார். இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களைக் மிகவும் கோபப்படுத்தி இருந்தது.

இந்த நிலையில் இது குறித்து பென் ஸ்டோக்ஸ் கூறுகையில் “ஐபிஎல் தொடரில் விளையாட முடியாமல் வெளியில் இருந்தது வருத்தமான விஷயம்தான். ஆனால் இந்த காலக்கட்டத்தில் நான் பேட்டிங் மற்றும் பிட்னஸ் ஆகிய விஷயங்களில் கவனம் செலுத்தினேன். ஜிம்மில் பிட்னஸ் தொடர்பாக நிறைய உழைத்தேன்.

சிஎஸ்கே அணிக்கு விளையாட இரண்டு வாய்ப்புகள் மட்டுமே கிடைத்தது ஏமாற்றமே. ஆனால் இந்தக் காலக்கட்டத்தில் நான் இங்கிலாந்து அணிக்குச் சிறப்பாக விளையாடுவதற்காக என்னை தயார் செய்து கொண்டேன்.

கெட்டதிலிருந்து எப்பொழுதும் நல்லதை எடுத்துக் கொள்ள வேண்டும். எனக்கு சிஎஸ்கே அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்காததை நான் இந்த முறையில் பாசிட்டிவாக எடுத்துக்கொண்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்தி இங்கிலாந்துக்காக விளையாட தயாரானேன்!” என்று கூறியிருக்கிறார்!