அருகில் ஐபிஎல்.. சிவம் துபே காயம்.. சர்ப்ராஸ் கான் தம்பி முசிர் கானுக்கு வாய்ப்பு.. வெளியான தகவல்கள்

0
407
Musheer

தற்போது இந்தியாவில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது. தொடரின் கடைசி மற்றும் ஐந்தாவது போட்டியில் தரம்சாலா மைதானத்தில் மார்ச் 7ஆம் தேதி ஆரம்பித்து 11ஆம் தேதி நிறைவடைகிறது.

இதற்குப் பிறகு 17வது ஐபிஎல் சீசன் மார்ச் இறுதியில் துவங்கி, மே மாதம் இறுதியில் இரண்டு மாதங்கள் நடைபெற்று முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாராளுமன்றத் தேர்தல் இருக்கின்ற காரணத்தினால் இன்னும் தெளிவான முடிவுகள் ஐபிஎல் குறித்து அறிவிக்கப்படவில்லை.

- Advertisement -

ஆனாலும் கூட ஐபிஎல் தொடர் இந்த முறை வெளிநாட்டுக்கு செல்லாது என எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியும் தேர்தலுடன் இணைந்து ஐபிஎல் தொடரையும் இந்தியாவில் நடத்த பிசிசிஐ அரசு நிர்வாகத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருப்பதாக தெரிகிறது.

இந்த நிலையில் ஐபிஎல் மிக வேகமாக நெருங்கிக் கொண்டிருக்கும் போது, சென்னை அணியின் மிக முக்கியமான வீரராக மாறி இருக்கும், மும்பை மாநில அணிக்காக விளையாடும் சிவம் துபே காயம் காரணமாக, ரஞ்சி கிரிக்கெட் கால் இறுதி சுற்றில் இருந்து வெளியேறலாம் என அறிக்கைகள் வெளியில் வந்திருக்கிறது.

அந்த அறிக்கையில் “சிவம் துபேவுக்கு அசாம் அணிக்கு எதிராக சதம் அடித்த போட்டியில் காயம் ஏற்பட்டு இருக்கிறது. இதன் காரணமாகவே அவர் இரண்டாவது இன்னிங்ஸில் களம் இறங்கவில்லை. அவர் மேற்கொண்டு ரஞ்சி டிராபியில் மொத்தமாக வெளியேறலாம் எனத் தெரிகிறது.

- Advertisement -

சிவம் துபே வெளியேறும் பட்சத்தில், அவருடைய இடத்தில் மும்பை அணிக்கு சர்ப்ராஸ் கான் தம்பி முசிர் கான் தேர்ந்தெடுக்கப்படலாம் என்றும் நம்பப்படுகிறது. அவர் நடந்து முடிந்த அண்டர் 19 உலக கோப்பை தொடரில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு இருந்தார்” என்று கூறப்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க : “உள்நாட்டு தொடரில் விளையாடுங்க.. இல்லனா ஐபிஎல் சம்பளமும் வராது” – முன்னாள் ஓபனர் பேச்சு

தற்பொழுது சிவம் துபேவுவுக்கு ஏற்பட்டு இருக்கும் காயம் கிரேடு 1 அளவில் இருக்கிறது. மேலும் ஐபிஎல் தொடர் அருகில் இருக்கின்ற பொழுது, காயம் முழுவதும் சரியாகி அவர் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாட வருவாரா? என்பது தற்பொழுது ஒரு கேள்விக்குறியாக இருக்கிறது.