விராட் மற்றும் ரோஹித் இருவரும் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டனர். 2024 டி20 உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு டி20 போட்டிகளில் இருந்தும், 2024-25 பார்டர்-கவாஸ்கர் டிராபியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றனர்.
அவர்கள் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடினாலும், ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்தும் விடைபெறும் நாள் வெகு தொலைவில் இல்லை. இந்த நிலையில் இது குறித்து பேசிய இசாந்த் சர்மா,”கிரிக்கெட் யாருக்காகவும் நிற்காது, இல்லையா? ரசிகர்கள் வருத்தப்படலாம். தனிப்பட்ட முறையில் நீங்களும் வருத்தப்படலாம்.
கோலி, ரோகித்துக்கு அறிவுரை:
“இவை அனைத்தும் இருக்கின்றன. ஆனால், நல்ல விஷயம் என்னவென்றால், இருவரும் முதிர்ச்சியானவர்கள். இது ஒரு கட்டத்தில் நடக்கும் என்பதை அறிவார்கள். இதை விரைவாக புரிந்துகொண்டால், அது மிகவும் நல்லது” என்றார்.
இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா, 2013ஆம் ஆண்டு தனது வாழ்க்கையில் ஏற்பட்ட கடினமான காலகட்டம் குறித்து மௌனத்தை உடைத்தார். அந்த சம்பவம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் மொஹாலியில் நடந்தது, அதில், ஜேம்ஸ் ஃபாக்னர் ஒரு ஓவரில் 30 ரன்கள் அடித்தார்.
ஆஸ்திரேலியா 304 ரன்கள் துரத்திய நிலையில், கடைசி மூன்று ஓவர்களில் 44 ரன்கள் தேவைப்பட்டது.
மனசோர்வில் இருந்தேன்:
இஷாந்த் ஷர்மா 48வது ஓவரை வீசினார், அங்கு ஃபாக்னர் அவரை நொறுக்கி 29 பந்துகளில் 64 ரன்கள் அவுட்டாகாமல் எடுத்து ஆஸ்திரேலியாவை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தார்.அந்த போட்டிக்குப் பிறகு ஒரு மாதம் மனச்சோர்வில் இருந்ததாக பந்து வீச்சாளர் வெளிப்படுத்தினார். அப்போது தனது காதலியாக இருந்த, தற்போது மனைவியான பிரதிமா சிங்கிடம் அழுததாகவும் கூறினார்.
இது குறித்து பேசிய இசாந்த், “நான் ஒரு மாதம் மனச்சோர்வில் இருந்தேன். மனச்சோர்வு என்று சரியாகச் சொல்ல முடியாது, ஆனால் நான் தினமும் அழுவேன். அப்போது பிரதிமாவுடன் டேட்டிங் செய்து கொண்டிருந்தேன். என் பெற்றோரிடம் பகிர முடியாதவற்றை அவளிடம் பகிர்ந்து கொண்டேன்.”
“அவள் என் மனைவி மட்டுமல்ல, என் சிறந்த நண்பரைப் போலவும் இருக்கிறாள். நான் அவளை அழைத்து, அணி என்னால் தோல்வியடைந்தது என்று அழுவேன். பின்னர் நாங்கள் தென்னாப்பிரிக்காவுக்கு சென்றோம். முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடவில்லை, மூன்றாவது போட்டியில் விளையாடினேன்.”
சிறந்த பேட்டர்ஸ் யார்?
“நான் என் உலகில் மூழ்கி, முன்னேற முடியாமல் இருந்தேன். பின்னர், அழுது விளையாடுவதா அல்லது போராடி விளையாடுவதா என்று யோசித்தேன். எப்படி மாறியது என்று தெரியவில்லை, ஆனால் நான் போராட முடிவு செய்தேன். நான்கு விக்கெட்டுகள் எடுத்தேன். பின்னர் டெஸ்ட் போட்டிகளிலும் விக்கெட்டுகள் எடுத்தேன். அங்கிருந்து என் மனநிலை மாறியது.”
இதையும் படிங்க: வெறும் 10 இன்னிங்ஸ்.. ஆஸியில் யூத் கிரிக்கெட்டில் வைபவ் சூரியவன்சி உலக சாதனை.. மிரட்டல் பேட்டிங்
சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், மேத்யூ ஹேடன், வீரேந்தர் சேவாக், கவுதம் கம்பீர், ஏபி டிவில்லியர்ஸ், விராட் கோலி, மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோரை வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் தாம் எதிர்கொண்ட கடினமான பேட்ஸ்மேன்களாக இசாந்த் சர்மா தெரிவித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்டீவ் ஸ்மித் மிகவும் கடினமான பேட்ஸ்மேனாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.தனது சர்வதேச கிரிக்கெட் 311 டெஸ்ட் விக்கெட்டுகளையும், 115 ஒருநாள் விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.






