தற்போது இந்திய டி20 அணியின் நட்சத்திர பேட்டர் இஷான் கிஷான் 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் விராட் கோலி உடன் நடந்த ஒரு உரையாடல் குறித்து உருக்கமாக பேசி இருக்கிறார்.
இந்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் இசான் கிஷான் அபிஷேக் சர்மாவுடன் இணைந்து துவக்க ஆட்டக்காரராக இந்திய அணிக்கு விளையாடுவார் என்பது உறுதியாகி இருக்கிறது. அதே சமயத்தில் அவர் கடினமான காலகட்டத்தில் இருந்த விஷயம் குறித்து பேசி இருக்கிறார்.
2021 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இஷான் கிஷான் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். அந்த ஆண்டு அவர் 7 போட்டிகளில் விளையாடி முடித்திருக்கும் பொழுது வெறும் 13 ரன் ஆவரேஜ் மட்டுமே வைத்திருந்தார். அந்த காலகட்டம் அவருக்கு மிகவும் மோசமானதாக அமைந்திருந்தது.
இந்த ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு எதிரான ஒரு போட்டியில் அந்த அணி 165 ரன்கள் எடுக்க அதை துரத்திய மும்பை இந்தியன்ஸ் 111 ரன் எடுத்து தோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு பிறகு டிரெஸ்ஸிங் ரூம் முன்பாக இஷான் கிஷான் சோகமாக படுத்திருந்தார். அப்போது தாமாக சென்று விராட் கோலி அவரை அழைத்து பேசிய புகைப்படங்கள் வைரலானது.
இதுகுறித்து இஷான் கிஷான் பேசும்பொழுது ” உண்மையில் அந்த போட்டியின் போது நான் மிகவும் சோகமாக இருந்தேன். அப்போது நான் விராட் கோலி என்னிடம் பேசும்பொழுது அழுது விடக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்து கண்ணீரை அடக்கி கொண்டேன். நான் டிரெஸ்ஸிங் ரூம் முன்பாக படுத்திருந்ததை பார்த்து அவர் ஏன் இவன் இப்படி இருக்கிறான் என்று தேடிவந்து பேசினார். அந்த ஏழை குழந்தைக்கு ஏதோ ஆயிருக்கிறது என்று அவர் நினைத்திருக்க வேண்டும்”
இதையும் படிங்க : எதிர் அணிகளுக்கு இவர் குடைச்சல் கொடுத்துட்டே இருப்பாரு.. இந்த ஸ்காட்லாந்து வீரரை நான் உன்னிப்பாக கவனிப்பேன் – அஸ்வின் கருத்து
“நான் உண்மையில் சச்சின் சாரை வணங்குவேன். நாங்கள் குடியிருந்த ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் எனக்கு ஒரு சிறிய படுக்கையறை இருந்தது. அதன் வலது புறத்தில் ஒரு சிறிய பூஜை அறையில் அவருடைய புகைப்படத்தை நான் வைத்திருப்பேன். நான் தினமும் அதை வணங்குவேன்” என்று கூறி இருக்கிறார்.