நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று ஹைதராபாத் அணி டெல்லி அணிக்கு எதிராக எளிதாக வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு சிறப்பாக அமைந்தது. இதுகுறித்து அந்த அணி கேப்டன் இஷான் கிஷான் பேசியிருக்கிறார்.
நேற்றைய போட்டியில் இறுதிக்கட்ட ஓவர்களை வீசுவதற்கு ஸ்பின்னர்களை கொண்டு வந்து இஷான் கிஷான் ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். சிறந்த வேகப்பந்துவீச்சாளர்களை வைத்து ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை கைப்பற்றி, டெல்லியை வெற்றியில் இருந்து தூரமாக வைத்துவிட்டு, பிறகு இறுதியில் ஸ்பின்னர்களை கொண்டு வந்து போட்டியை சுமுகமாக முடித்தார்.
தற்போது ஹைதராபாத் அணிக்கு இஷான் கிஷான் கேப்டனாக நல்ல முறையில் செட் ஆகிவிட்டார். மொத்தம் ஏழு போட்டிகளில் விளையாடி உள்ள அந்த அணி நான்கு போட்டிகளில் வென்று 8 புள்ளிகள் உடன் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இனி கம்மின்ஸ் வந்தால் கூட வெளியில் அமர வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
இதுகுறித்து இஷான் கிஷான் பேசும்போது ” அபிஷேக் ஷர்மா முழு போட்டியிலும் எப்படி விளையாடினார், இறுதியில் கிளாஸன் எப்படி முடித்து வைத்தார் என்பதை பார்க்கும் போது, இந்த ஆடுகளத்தில் நீங்கள் 200 ரன்கள் எடுத்திருந்தாலே போதுமானது. வந்து பழையதாக இருக்கும் போது உள்ளே வரும் புதிய பேட்ஸ்மேன்களுக்கு விளையாடுவது எளிதாக இருக்காது”
“நாங்கள் அணியில் பேசுவது என்னவென்றால் ஒவ்வொரு போட்டியையும் எடுத்துக் கொண்டு ஒவ்வொரு நாளாக செல்ல வேண்டும் என்பதுதான். எங்கள் அணி வீரர்களை விட்டால் எல்லோரும் முதல் பந்தில் இருந்தே அடிக்க பார்ப்பார்கள். ஆனால் முதல் இரண்டு மூன்று பந்துகளை எடுத்துக் கொண்டு ஆடுகளத்தை புரிந்து கொண்டு ஆட சொல்கிறோம்”
இதையும் படிங்க : நான் அதிரடியா ஆடறதுக்கு காரணம் இந்த பஞ்சாப் கேரக்டர்தான்.. ரசிகர்களுக்காக இதை பண்றன் – அபிஷேக் ஷர்மா பேச்சு
“மேலும் எங்கள் திட்டம் என்று பெரிதாக எதுவும் கிடையாது. பந்தை நன்றாக பாருங்கள் அடியுங்கள் என்பது தான் திட்டம். மேலும் ஒரு கேப்டனாக நான் என் வீரர்களிடம் அதிகம் பேசக்கூடிய ஆள் கிடையாது. நான் சொல்வது ஒன்றுதான் போய் சந்தோசமாக விளையாடுங்கள் என்பதுதான்” என்று கூறி இருக்கிறார்.