ரிஷப் பண்டின் இடத்தைப் பிடிக்க நினைக்குறீர்களா ? என்ற கேள்விக்கு விளக்கம் அளித்துள்ள இஷான் கிஷன்

0
182
Rishabh Pant and Ishan Kishan

2016 ஆம் ஆண்டு ஐசிசி அண்டர் 19வது உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி ரன்னர் அப் பட்டத்தை வென்றது. அந்த தொடரில் இந்திய அணியின் கேப்டனாக இஷான் கிஷன் மற்றும் துணை கேப்டனாக ரிஷப் பண்ட் இருவரும் இணைந்து விளையாடினார். இருவருமே விட்டு கீப்பர் பேட்ஸ்மேன்கள் என்பது நம் அனைவருக்கும் தெரியும், ஆனால் இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து ஓபனிங் பேட்ஸ்மேன்களாக தொடர் முழுக்க விளையாடினார்கள்.

இவர்கள் இருவரும் அதிரடியான துவக்கத்தை அந்த தொடர் முழுக்க கொடுத்தது நம்மில் நிறையப் பேருக்குத் தெரிந்திட வாய்ப்பு இல்லை. தற்பொழுது ரிஷப் பண்ட் இந்திய அணியின் முக்கியமான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக அனைத்து வித கிரிக்கெட் பார்மெட்டிலும் தனது முத்திரையை அழுத்தமாக பதித்து விட்டார்.

மறுபக்கம் இஷான் கிஷன் 8 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் மட்டுமே விளையாடி இருக்கிறார். ரிஷப் பண்ட்ருக்கு அடுத்தபடியாக இஷான் கிஷன் விக்கெட் கீப்பராக வருங்காலத்தில் விளையாட மட்டுமே வாய்ப்பு உள்ளது. இருவரும் ஒன்றாக அண்டர் 19 அணியில் விளையாடத் தொடங்கினாலும் தற்பொழுது ரிஷப் பண்ட் மிகப்பெரிய உச்சத்தை தொட்டு விட்டார். மறுபக்கம் இஷான் தற்பொழுது தான் தன்னுடைய திறமையை படிப்படியாக நிரூபித்து வருகிறார்.

எங்களுக்குள் எப்பொழுதும் ஒளிவுமறைவு இருந்ததில்லை

சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் ஏலத்தில் 15 கோடியே 25 லட்ச ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணி இஷான் கிஷனை கைப்பற்றியது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். சமீபத்தில் அவரிடம் ஒரு உரையாடல் ஒன்று நடத்தப்பட்டது. அந்த உரையாடலில் அவருடைய நண்பர் ரிஷப் பண்ட் குறித்து ஒரு சில கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டன.

அதற்கு பதிலளித்த அவர் “2014 ஆம் ஆண்டு அண்டர் 19 தொடர்பில் நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக வலம் வந்தோம். போட்டி இல்லாத சமயத்தில் ஒன்றாக இணைந்து திரைப்படம் பார்ப்பது அல்லது வெளியே சுற்றுவது என்று சந்தோஷமாகவே நாங்கள் நேரத்தை கழிப்போம்.

கிரிக்கெட் குறித்து நிறைய விஷயங்களை நாங்கள் பரிமாறிக் கொள்வோம் எப்பொழுதும் எந்தவித ஒளிவு மறைவும் எங்களிடம் இருந்ததில்லை. தற்போது கூட அவருடைய இடத்தை தக்கவைக்க வேண்டும் என்கிற எண்ணம் என்னிடம் சுத்தமாக இல்லை. அதே போல தான் அவரும். எங்களுடைய நட்பு வளர்ந்து கொண்டேதான் போகும்.

ஒருவேளை எங்கள் இருவருக்கும் போட்டி என்று வந்துவிட்டால் அது ஆரோக்கியமான போட்டியாக மட்டுமே இருக்கும் என்றும், அவ்வாறே ஆரோக்கியமான போட்டி ஏற்பட்டாலும் அது கலகலப்பாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். மேலும் பேசிய அவர் இந்திய அணிக்கு விக்கெட் கீப்பிங் செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தால் அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்வேன் என்றும், வாய்ப்பு கிடைக்கும் சமயத்தில் என்னுடைய திறமையை நான் முழுமையாக நிறைவேற்ற வேண்டும் நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.