2வது டி20ல் பும்ரா ஆடுவாரா? – சூரியகுமார் யாதவ் கொடுத்த அப்டேட்!

0
147

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் பும்ரா இருப்பாரா? என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார் சூரியகுமார் யாதவ்.

டி20 உலக கோப்பை தொடர் நெருங்கி வருவதால் நாளுக்கு நாள் இந்திய அணி டி20 போட்டிகளில் மட்டுமே முழு கவனம் செலுத்தி வருகிறது. டி20 உலககோப்பைக்கு முன்னோட்டமாக ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுடன் தலா 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடர் நடைபெறுகிறது.

- Advertisement -

மொகாலி மைதானத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 208 ரன்கள் அடித்தும், அதை கட்டுப்படுத்த முடியாமல் நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை தழுவியது. இதற்கு முழு முக்கிய காரணம் இந்திய அணியின் மோசமான பந்துவீச்சு தான் என்று தொடர்ந்து விமர்சனங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இதற்கு முன்னர் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரிலும் பந்துவீச்சின் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடருக்கு பிறகு, காயம் காரணமாக பும்ரா இந்திய அணியியில் விளையாடவில்லை. நன்றாக குணமடைந்ததால் டி20 உலக கோப்பை தொடருக்கு அவர் எடுக்கப்பட்டிருக்கிறார். தனது முழு உடல் தகுதியை நிரூபித்ததால் பிசிசிஐ இந்த முடிவை எடுத்திருந்தது. 

தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரிலும் அவர் இருக்கிறார். ஆனால் முதல் போட்டியில் அவரை ஆடவைக்கவில்லை. முழு உடல் தகுதியுடன் இருந்தும் ஏன் அவர் ஆடவைக்கப்படவில்லை? இந்திய அணி பந்துவீச்சில் மோசமாக இருக்கிறது. இந்த தருணத்தில் அவரது பந்துவீச்சு எவ்வளவு முக்கியம் என்பதை அனைவரும் அறிவோம். ஆனாலும் ஏன் வெளியில் அமர்த்தபட்டார்? என தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தன.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணி நட்சத்திர பேட்ஸ்மேன் சூரியகுமார் யாதவ் சமீபத்திய பேட்டியில் பும்ரா உடல் தகுதி மற்றும் இரண்டாவது டி20 போட்டியில் அவர் இடம் பெறுவாரா? என்பது பற்றி பதில் அளித்துள்ளார். “நீங்கள் இந்த கேள்வியை என்னிடம் கேட்கக் கூடாது. இது என்னுடைய டிபார்ட்மெண்ட் இல்லை. இதைப் பற்றி அணியின் மருத்துவர்கள் மற்றும் பிசியோதெரபிஸ்ட் ஆகியோரிடம் கேட்பது மிகச் சரியானதாக இருக்கும். எங்களுக்கு அரசல்புரசலாக காதுகளில் செய்திகள் வரும் அவ்வளவுதான். இருந்தாலும் நான் இதற்கு பதில் அளிக்கிறேன். இந்திய அணியில் தற்போது இருக்கும் அனைத்து வீரர்களும் மிகவும் ஃபிட்டாக இருக்கிறார்கள். இரண்டாவது டி20 போட்டியில் பும்ரா நிச்சயம் இடம் பெறுவார் என நானும் நினைக்கிறேன். அப்படித்தான் எனக்கும் சில தகவல்கள் வருகின்றன. ஆனால் போட்டிக்கு சில மணி நேரம் முன்னர் தான் அனைத்தும் உறுதி செய்யப்படும். ரோகித் திட்டமிட்டு வருவதை பார்க்கையில், நிச்சயம் பும்ரா விளையாடுவார் என்று தெரிகிறது. அவர் முழு உடல் தகுதியுடன் இருக்கிறார்.” என கூறினார்.