இந்திய கிரிக்கெட்

இங்கிலாந்துல உங்கள.. இந்த தமிழ்நாட்டு பையன்தான் காப்பாற்றுவார்.. தப்பு கணக்கு போடாதிங்க – இர்பான் பதான் பேச்சு

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சர்துல் தாக்கூரை நீக்கிவிட்டு அந்த இடத்திற்கு யாரை கொண்டு வருவது இந்தியா அணியை பேட்டிங் சரிவிலிருந்து காப்பாற்றும் என இந்திய முன்னாள் வீரர் இர்பான் பதான் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

நாளை இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி துவங்க இருக்கிறது. இந்த நிலையில் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்து அணி அப்படியே களம் இறங்குகிறது. ஆனால் இந்திய அணியில் குறைந்தபட்சம் இரண்டு மாற்றங்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக பையன் விளையாடலாம்

இது குறித்து இர்பான் பதான் பேசும்பொழுது “ஷர்துல் பந்து வீசிய விதம் மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. அவர் காயத்திற்கு பிறகு நீண்ட நாட்கள் கழித்து இந்திய அணியில் வாய்ப்பு பெற்று இருந்தார். இது எளிதானது கிடையாது. மேலும் புதிய பந்தில் அவரை தேவைக்கு தகுந்த அளவுக்கு பயன்படுத்தவில்லை. பழைய பந்தில் அவர் நிச்சயம் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக செயல்படவில்லை”

“முதல் போட்டியில் தோல்வி அடைந்ததற்கு நிறைய காரணங்கள் இருக்கிறது ஆனால் என்னை அதிகம் ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியது பேட்டிங் சரிவுதான். அதாவது இடத்தில் பேட்டிங் செய்த இவர் சரிவை தடுத்து இருக்க வேண்டும். எனவே அடுத்த போட்டியில் ஒன்று குல்தீப் யாதவ் விளையாட வேண்டும். அப்படி இல்லையென்றால் வாஷிங்டன் சுந்தரை எட்டாவது இடத்தில் விளையாட வைத்தால் பேட்டிங் வரிசை நீளமாகிவிடும் சரிவு வராது”

- Advertisement -

நிதீஷ் குமார் ரெட்டிதான் தேவை

“முதல் டெஸ்ட் போட்டிக்கு நிதிஷ்குமார் அடியை விளையாட வேண்டும் என்று நான் கூறியிருந்தேன். அவர் ஆஸ்திரேலியாவில் விளையாடி ஒரு டெஸ்ட் சதம் அடித்திருக்கிறார். கடைசியில் வரிசையில் அவர் சிறப்பாக பேட்டிங் செய்தார். இப்போதைக்கு நடுத்தர வேகத்தில் பந்து வீசும் அவர் 10 ஓவர்கள் வீச முடியும். இன்னும் கொஞ்சம் நாட்கள் செல்லும் பொழுது அவர் 15 ஓவர் வீசினால், வெளிநாட்டு மண்ணில் உங்களுக்கு நான்காவது வேகம் பந்துவீச்சாளராக அவர் இருக்க முடியும்”

இதையும் படிங்க : நான் ஓய்வு பெறாததுக்கு காரணம் இந்தியாதான்.. எனக்கு இன்னும் 3 விஷயங்கள் தேவை – நாதன் லயன் பேச்சு

“நிதீஷ் குமார் ரெட்டி உடன் இந்திய அணி நிர்வாகம் தொடர்ந்து விளையாட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். சாய் சுதர்சன் அல்லது கருண் நாயர் இடத்திற்கு அவர் வரவேண்டும். இப்படி பார்க்கும் பொழுது சாய் சுதர்சனை விட கருண் நாயர் விளையாடுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. அவர் மூன்றாவது இடத்தில் விளையாடலாம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts