நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சூப்பர் 8 சுற்றில் வருகின்ற வியாழக்கிழமை ஆப்கானிஸ்தான் அணியை எதிர்த்து பார்படாஸ் மைதானத்தில் விளையாட இருக்கிறது. இந்த போட்டியில் குறிப்பிட்ட நான்கு இந்திய வீரர்கள் முக்கியமானவர்களாக இருப்பார்கள் என இர்பான் பதான் கணித்திருக்கிறார்.
சூப்பர் எட்டு சுற்றில் இந்தியா இடம் பெற்று இருக்கும் குழுவில் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆஸ்திரேலியா என மூன்று அணிகள் இடம் பெற்றிருக்கின்றன. முதலில் ஆப்கானிஸ்தான் அடுத்து பங்களாதேஷ் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக இந்திய அணி விளையாட இருக்கிறது.
வெஸ்ட் இண்டீஸ் சூழ்நிலை சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்கின்ற காரணத்தினால், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் போன்ற சிறிய அணிகளை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. எனவே இந்திய அணிக்கு அடுத்த சுற்றில் நல்ல போட்டி காத்திருக்கிறது.
இது குறித்து இர்பான் பதான் கூறும்பொழுது “ஆப்கானிஸ்தான் அணியின் பவுலிங் யூனிட்டுக்கு எதிராக இந்திய அணி நல்ல திட்டத்தை வைத்திருக்க வேண்டியது அவசியம். அதே நேரத்தில் சூரியகுமார் யாதவ் பேட்டிங்கில் முக்கியமான இடத்தை கொண்டு இருப்பார் என்று நினைக்கிறேன். ஏனென்றால் அந்த அணியில் சுழல் பந்துவீச்சாளர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். மெதுவான பந்துவீச்சுக்கு எதிராக சூரியகுமார் விளையாடும் ஷாட்கள் முக்கியமானவை.
ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் நன்றாக பேட்டிங் செய்ய வேண்டியது அவசியம். இருவரும் நன்றாக பேட்டிங் செய்வார்கள் என்றும் நம்புகிறேன். மேலும் விராட் கோலியும் முக்கியமான வீரர். அவர் தனக்கான வழியை கண்டுபிடிப்பார்.
இதையும் படிங்க :
இதேபோல் சூப்பர் 8 சுற்றில் இந்திய அணிக்கு ஆஸ்திரேலியா அணி மிகவும் கடினமானதாக இருக்கும். ஏனென்றால் அவர்கள் தங்களின் முதல் சுற்றில் எல்லா போட்டிகளையும் வெஸ்ட் இண்டீஸ் சூழ்நிலையில் விளையாடுகிறார்கள். எனவே அவர்கள் அதற்கு நன்றாக பழகி இருப்பார்கள். பந்து வீச்சில்தான் நாம் அவர்களை வீழ்த்த முடியும்” என்று கூறியிருக்கிறார்.






